Published : 25 Sep 2014 10:51 AM
Last Updated : 25 Sep 2014 10:51 AM

பிரெஞ்சுப் பிணைக் கைதி தலை துண்டிப்பு: ஐ.எஸ். மீண்டும் அட்டூழியம்

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிணைக் கைதியின் தலையை ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் துண்டித்தனர்.

பிரான்ஸ் நாட்டு அதிபர் ஹாலண்டே இதனை உறுதிசெய்துள்ளார். அல்ஜீரியாவில், ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களால் ஹெர்வே கோர்டெல் (55) பிணைக்கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அவரது தலையை துண்டித்து ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் படுகொலை செய்ததாக தகவல் வெளியானது. தகவலை உறுதி செய்த பிரான்ஸ் நாட்டு அதிபர் ஹாலண்டே: இச்செயல் மிகவும் கொடூரமானது, கோழைத்தனமானது என கண்டித்துள்ளார்.

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொள்ள நியூயார்க் சென்றுள்ள பிரான்ஸ் அதிபர், ஐ.எஸ். செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஹெர்வே கோர்டெல், சுற்றுலா வழிகாட்டி. கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று அல்ஜீரியாவில் ஜுண்ட்- அல்- கிலாபா குழுவினர் அவரை சிறைப்பிடித்தனர்.

தாக்குதல் தொடரும்:

ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களின் இந்த தாக்குதல் தீவிரவாதத்திற்கு எதிராக போராட வேண்டும் என்ற எங்கள் கொள்கையை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. ஐ.எஸ்.-க்கு எதிரான தாக்குதலை நாங்கள் தொடர்ந்து நடத்துவோம். பிரெஞ்சுப் படைகளின் வான்வழி தாக்குதலும் தொடரும் என ஹாலண்டே கூறியுள்ளார்.

மேலும், ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு, இராக்கில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களை ராணுவ தாக்குதல் மேற்கொள்வது குறித்தும், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்களை பத்திரமாக மீட்பது குறித்தும் ஆலோசிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ் மிரட்டல்:

பிரான்ஸ் நாட்டு பிணைக்கைதியின் தலையை துண்டிக்கும் வீடியோ பதிவில், ஐ.எஸ். ஜிகாதிப் படைகளுக்கு எதிராக அணி சேரும் மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான தாக்குதல் தொடரும் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளியன்று ஐ.எஸ். படைகளுக்கு எதிரான வான்வழித் தாக்குதலை பிரான்ஸ் தொடங்கியது என்பது கவனிக்கத்தது.

3 பேர் தலை துண்டிப்பு:

இதற்கு முன்னதாக அமெரிக்க பத்திரிகையாளர்கள் ஜேம்ஸ் போலே, ஸ்டீவன் ஸாட்லாஃப் மற்றும் பிரிட்டனின் டேவிட் ஹேன்ஸ் ஆகியோரது தலையை ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் துண்டித்தனர் என்பது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x