Published : 03 Apr 2019 07:17 PM
Last Updated : 03 Apr 2019 07:17 PM

கம்பீர் கிண்டலுக்குப் பதிலடி கொடுத்த ஓமர் அப்துல்லாவை ‘ஹோட்டல் ரிசப்ஷனிஸ்ட்’ என பாஜக கேலி

ட்விட்டரில் பாஜக, ஓமர் அப்துல்லா மோதல் தொடர்கதையாகி வருகிறது. ஜம்மு காஷ்மீருக்கு தனி பிரதமர் என்ற கோரிக்கையை அவர் முன் வைக்க கிரிக்கெடி வீரரும் பாஜகவின் புதிய உறுப்பினருமான கவுதம் கம்பீர் ஓமர் அப்துல்லாவைச் சாட, பதிலுக்கு அவரும் ‘தம்பி, உனக்குத் தெரிந்ததைப் பேசு’ என்று பதிலடி கொடுத்தார்.

இந்நிலையில் பாஜகவின் நுபுர் ஷர்மா,  ‘காஷ்மீரின் வலியை அதிகரிக்காதீர்கள், உங்களுக்குத் தெரிந்ததில் நாட்டம் செலுத்துங்கள்- நீங்கள் ஹோட்டல் ரிசப்ஷனிஸ்ட் தானே’ என்ற தொனியில் ட்வீட் செய்துள்ளார்.

ஓமர் அப்துல்லாவின் காஷ்மீருக்கு தனிப்பிரதமர் கோரிக்கை மீது கம்பீர் வைத்த விமர்சனம்: “ஓமர் அப்துல்லா ஜம்மு காஷ்மீருக்கு தனிப் பிரதமரை விரும்புகிறார், நான் கடல்களில் நடக்க விரும்புகிறேன்! ஓமர் அப்துல்லா காஷ்மீருக்கு தனியான பிரதமர் வேண்டும் என்று விரும்புகிறார், நான் பன்றிகள் பறக்க ஆசைப்படுகிறேன்! தனியான பிரதமர் என்பதை விடவும் ஓமர் அப்துல்லாவுக்கு இப்போது தேவை நல்ல ஸ்ட்ராங் காஃபி, அதன் பிறகு நல்ல தூக்கம்! இதன் பிறகும் கூட ஓமர் அப்துல்லா புரிந்து கொள்ளவில்லையெனில் பாகிஸ்தான் பச்சைப் பாஸ்போர்ட்தான்” என்று கேலி செய்திருந்தார்.

இதற்குப் பதிலடியாக ஓமர் அப்துல்லா,  “கவுதம் நான் அதிகம் கிரிக்கெட் ஆடியதில்லை, காரணம் அதில் நான் சிறந்தவனல்ல என்பது எனக்குத் தெரியும்.  அதே போல் ஜம்மு காஷ்மீர் பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாது, அதன் வரலாறோ அதனை வடிவமைத்ததில் தேசிய மாநாட்டின் பங்கையோ நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். ஆனாலும் நீங்கள் உங்கள் அறியாமையை வெளிப்படுத்துகிறீர்கள். அனைவரும் பார்க்கும்படியாக உங்கள் அறியாமையை வெளிப்படுத்தியுள்ளீர்கள். உங்களுக்குத் தெரிந்தவற்றுடன் நிறுத்திக் கொள்ளுங்கள். ஐபிஎல் பற்றி ட்வீட் போடுங்கள்” என்று சாடினார்.

இந்நிலையில் பாஜக-வின் நுபுர் ஷர்மா, ஓமர் அப்துல்லாவை விமர்சித்து, “காஷ்மீரின் வலியை அதிகரிக்காதீர்கள்,  ஒரு ஹோட்டல் ரிசப்ஷனிஸ்டாக உங்களுக்குத் தெரிந்ததில் நாட்டம் செலுத்துங்கள்” என்ற தொனியில் ட்வீட் செய்துள்ளார்.

இதற்கும் விடாமல் பதிலளித்த ஓமர் அப்துல்லா, “இவர்களின் செருக்கைப் பாருங்கள். அவர்கள் தலைவரின் எளிமையான துவக்கத்தையும் கூட கொச்சைப் படுத்துவார்கள் போலிருக்கிறது.  என்னுடைய எளிமையான துவக்கம் குறித்து நான் வெட்கப்பட வேண்டுமா? எந்த ஒரு நேர்மையான தொழிலிலும் கவுரவம் உள்ளது. நான் எப்படி என் வாழ்க்கையைத் தொடங்கினேனோ அது குறித்து எனக்குப் பெருமையாகவே உள்ளது” என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x