Published : 12 Apr 2019 09:56 PM
Last Updated : 12 Apr 2019 09:56 PM

ஆம் ஆத்மி-காங்கிரஸ் பேச்சுவார்த்தை முறிவு எதிரொலி: டெல்லியின் 4-ல் மட்டும் வேட்பாளரை நிறுத்த ராகுல் யோசனை

டெல்லியில் கூட்டணிக்காக ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸுக்கு இடையிலானப் பேச்சுவார்த்தை தோல்வியுற்றது. இதையடுத்து பாஜகவை எதிர்க்க 4 தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்களை நிறுத்த ராகுல் காந்தி ஆலோசனை செய்வதாகக் கூறப்படுகிறது.

 

இந்த இரண்டு கட்சிகளுடனான பேச்சுவார்த்தை மொத்தம் ஆறுகட்டங்களாக நடைபெற்றும் பலனில்லாமல் போனது. இதன் தோல்விக்கு டெல்லிக்கு வெளியே காங்கிரஸ் விதித்த நிபந்தனையை ஆம் ஆத்மி ஏற்காதது காரணம் எனக் கருதப்படுகிறது.

 

இந்நிலையில், டெல்லியின் ஏழு தொகுதிகளில் நிலவும் மும்முனைப் போட்டியை தவிர்க்கவும், அதனால் பாஜக பலன் பெறுவதை தடுக்கவும் ஒரு புதிய யோசனை செய்கிறது. இதன்படி, 3-ல் வேட்பாளரை நிறுத்தாமல் விட்டு விடுவது என யோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

 

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் காங்கிரஸ் நிர்வாகிகள் கூறும்போது, ‘முன்னாள் மத்திய அமைச்சர்களில் கபில்சிபல் சாந்தினி சவுக்கிலும், புதுடெல்லியில் அஜய்மக்கனும், கிழக்கு டெல்லியில் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித், வடமேற்கு டெல்லியில் ராஜ்குமார் சவுகானும் தேர்வு செய்து வைக்கபப்ட்டுள்ளன. மீதம் உள்ள மூன்றில் காங்கிரஸ் ஒதுங்கி இருக்க வாய்ப்புகள் உள்ளன.’ எனத் தெரிவித்தனர்.

 

சாந்தினி சவுக்கின் கபில் சிபல் மற்றும் புதுடெல்லியின் அஜய்மக்கன் இரண்டுமுறை எம்பியாக இருந்தவர்கள். மூன்றுமுறை முன்னாள் முதல்வரான ஷீலாவும் மூன்றுமுறை எம்எல்ஏவுமான ராஜ்குமார் சவுகானின் வெற்றியும் உறுதி எனக் காங்கிரஸ் கருதுகிறது.

 

இந்த நால்வரின் பெயர்கள் நாளை காங்கிரஸ் வெளியிடும் வாய்ப்புகள் உள்ளன. இதன்மூலம், ஆம் ஆத்மி

 

கட்சியும் மூன்றில் மட்டும் வேட்பாளர்களை நிறுத்தும் எனவும், நான்கு தொகுதிகளில் நட்புரீதியான போட்டிக்கு வழிவகுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதுபோல், உபியில் மாயாவதியும், அகிலேஷ்சிங்கும் இணைந்த அமைத்த மெகா கூட்டணியில் அமேதியிலும், ரேபரேலியிலும் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. இவர்கள் கூட்டணியில் காங்கிரஸ் சேர்க்கப்படவும் இல்லை.

 

இதற்கு பதிலாக காங்கிரஸ் மெகா கூட்டணியின் முக்கியத் தலைவர்கள் போட்டியிடும் ஐந்து தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தாமல் விட்டு வைத்துள்ளது. இதன்மூலம், வாக்குகள் பிரியாமல் பாஜக வேட்பாளர்களை எதிர்கட்சிகள் உறுதியுடன் எதிர்கொள்வது நினைவுகூரத்தக்கது.-

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x