Published : 30 Apr 2019 12:14 PM
Last Updated : 30 Apr 2019 12:14 PM

நிஜ மார்க் 99; கொடுத்த மார்க் 0: தெலங்கானா தேர்வு முடிவில் குளறுபடி

தெலங்கானாவில் இண்டர்மீடியட் எனப்படும் பள்ளி மேனிலை வகுப்பு தேர்வு முடிவுகளில் ஏராளமான குளறுபடி ஏற்பட்டதால், பெற்றோர்கள் வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர்.  9 லட்சம் பேர் கலந்துகொண்ட இத்தேர்வில், 3 லட்சம் பேர் 'ஃபெயில்' ஆகியுள்ளனர்.

தெலங்கானாவில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகள் பள்ளிகளில் அல்லாமல் இண்டர்மீடியட் எனப்படும் ஜூனியர் கல்லூரிகளாக நடைபெறுகின்றன. இதன் இறுதித்தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

ஏராளமான மாணவர்கள் தங்களுக்கு ஒற்றை இலக்கத்தில் மட்டுமே மதிப்பெண் வழங்கப்பட்டிருப்பதாகக் குமுறுகிறார்கள். இதில் நவ்யாவின் கதை அதிலும் மோசம்.

 

மஞ்சேரியல் பகுதியில் கரிமாலா ஜூனியர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிப்பவர் நவ்யா. தெலுங்கு பாடத்தில் அவர் 99 மதிப்பெண்கள் பெற்ற போதிலும், விடைத்தாளில் ஏற்பட்ட தவறால் அவருக்கு வழங்கப்பட்ட மதிப்பெண் பூஜ்யம்.

 

இதுதொடர்பாக வலுவாகக் கண்டனம் எழுந்துள்ள நிலையில், இண்டர்மீடியட் கல்வி வாரியம், மேற்பார்வையாளராக இருந்த ஸ்ரீ நாராயணா ஜூனியர் கல்லூரி தெலுங்கு லெக்சரருக்கு ரூ.5,000 அபராதம் விதித்துள்ளது.

 

நவ்யாவின் விடைத்தாளைத் திருத்திய தெலங்கானா பழங்குடியின நல ஆண்கள் ஜூனியர் கல்லூரி லெக்சரர் விஜய் குமாரை பணியிடை நீக்கம் செய்யவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x