

பாஜக-வில் இணையவுள்ளதாக செய்திகள் வெளியானதை அக்ஷய்குமாரின் மனைவி ட்விங்கிள் கண்ணா கிண்டல் செய்துள்ளார்.
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருடனான அந்த நேர்காணலில் அரசியல் கடந்து தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பிரதமர் மோடி பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். டெல்லியில் பிரதமர் இல்லத்தில் இந்த நேர்காணல் நடைபெற்றது. 3 கட்டத் தேர்தல்கள் முடிந்த நிலையில் இந்தப் பேட்டி அரசியல் பேட்டி அல்ல என்று கூறப்பட்டாலும்கூட அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது.
அரசியல் சார்பு இல்லாத அக்ஷய் குமார் இந்தப் பேட்டியை எடுத்திருந்தாலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் இதனைக் கிண்டல் செய்தும் சாடியும் வருகிறார்கள்.மேலும், இப்பேட்டியில் பிரதமர் மோடியிடம் "ட்விட்டரில் நீங்கள் யாரைப் பின் தொடர்கிறீர்கள்" என்று கேள்வி எழுப்பினார். இதற்கு "அக்ஷய் குமாரையும், ட்விங்கிள் கண்ணாவையும் பின்தொடர்கிறேன்" என்று பதிலளித்தார் பிரதமர் மோடி
அக்ஷய் குமாரின் மனைவி தான் ட்விங்கிள் கண்ணா. இவர் பலமுறை பாஜகவை எதிர்த்து கருத்து தெரிவித்துள்ளார். ஆனால் பிரதமர் மோடியின் கருத்துக்கு ட்விங்கிள் கண்ணா தனது ட்விட்டர் பதிவில் “இதை நான் நேர்மறையாகப் பார்க்கிறேன். பிரதமருக்கு என்னைப் போல ஒருவர் இருப்பது தெரிந்திருக்கறது என்பதோடு அவர் நான் எழுதுவதைப் படிக்கிறார் என்பதும் தெரியவந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இந்தப் பதிலால் பாஜகவில் இணையப் போகிறார் ட்விங்கிள் கண்ணா என்று பலரும் செய்திகள் வெளியிட்டார்கள். இச்செய்தியை மேற்கொளிட்டு “அதிகமாகவுமில்லை, குறைவாகவுமில்லை - ஒரு பதில் என்பது ஆதரவாக ஆகாது. இந்த நேரத்தில் நான் பங்குகொள்ள விரும்பும் ஒரே பார்ட்டி, தாரளமாக வோட்காவும், அடுத்த நாள் ஹாங்க் ஓவரும் கொடுக்கும் பார்ட்டி தான்” என்று கிண்டல் தொனியில் தெரிவித்துள்ளார் ட்விங்கிள் கண்ணா.