

இடைத்தேர்தல் முடிவு அதிர்ச்சியும், ஆச்சரியமும் அளிப்பதாக பாஜகவின் கூட்டணி கட்சியான சிவ சேனை தெரிவித்துள்ளது.
சிவசேனாவின் சாம்னா பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள தலையங்கத்தில், "இடைத்தேர்தல் முடிவுகள் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அளிக்கின்றன.
மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலுக்கு ஆயத்தமாகும் பாஜக, அதனை எதிர்கொள்ள இடைத்தேர்தல் முடிவில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
வாக்காளர்களை அசட்டை செய்யக்கூடாது. அவர்கள் புத்திசாலிகள். களத்தில் இறங்கி வேலை செய்யாவிட்டால் மக்கள் மூழ்கடித்துவிடுவார்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 மாநில இடைத்தேர்தல் முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியாகின. இதில், பாஜக கடும் பின்னடைவை சந்தித்தது.