

பள்ளி வளாகத்தில் ரகசியமாக மொபைல் போனில் பேசியதை ஹாஸ்டல் வார்டன் கண்டித்ததால் மனமுடைந்து 2 மாணவிகள் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
அகர்த்தலாவில் உள்ள தாக்கர்ஜலா உயர்நிலைப் பள்ளி மாணவிகள் மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 16வயதான இருவரது உடல்களும் தற்போது பிரேத பரிசோதனைக்கு அனுப்பப் பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சிமா தெபர்மா, பினா தெபர்மா என்ற இந்த மாணவிகள் ரகசியமாக செல்போனைப் பயன்படுத்தியுள்ளனர். அது அங்கு தடைசெய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இது பற்றி ஹாஸ்டல் வார்டன் மற்றும் மாணவிகளின் பொறுப்பாளரும் கண்டித்துள்ளனர். இதனால் அவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.
அவர்கள் உடலில் எந்த விதக் காயமோ பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கான அடையாளங்களோ இல்லை என்று காவல்துறை கூறினாலும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கான்பூரில் கடந்த மாதம் பள்ளிக்கு மொபைல் போன் கொண்டு வந்ததற்காக ஆசிரியர் ஒருவர் மாணவியை அடித்து உதைத்து, ஆடைகளைக் களைந்து 2 மணி நேரம் வகுப்பில் சக மாணவிகள் முன்பு நிறுத்தியதால் ஏற்பட்ட அவமானத்தில் 12 வயது மாணவி தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.