Published : 11 Sep 2014 09:21 AM
Last Updated : 11 Sep 2014 09:21 AM

உ.பி. இடைத்தேர்தலில் இருமுனைப் போட்டி: ஆளும் சமாஜ்வாதி கட்சியுடன் மோதும் பாஜக

உத்தரப் பிரதேசத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் இருமுனைப் போட்டி நிலவுகிறது. இங்கு ஆளும் சமாஜ்வாதி கட்சியை எதிர்த்து பாரதிய ஜனதா கட்சி மட்டுமே நேரடியாக மோதுகிறது.

கடந்த மக்களவைத் தேர்தலில் 2 தொகுதியில் வெற்றி பெற்ற சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், மெயின்புரி தொகுதியின் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதுபோல் பாஜகவின் 10 எம்.எல்.ஏ.க்களும் அதன் கூட்டணிக் கட்சியான அப்னா தளத்தைச் சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ.வும் மக்களவைத் தேர்த லில் போட்டியிட்டு வென்றனர்.

இதையடுத்து காலியாக உள்ள ஒரு மக்களவை மற்றும் 11 சட்டபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் செப்டம்பர் 13-ல் நடைபெற உள்ளது. இதில், மெயின்புரி மக்களவை தொகுதியில் சமாஜ்வாதி கட்சி சார்பில் முலாயம் சிங் பேரன் தேஜ் பிரதாப் சிங் முதல் முறையாக களமிறக்கப்பட்டுள்ளார்.

இங்கு மாயாவதி தலைமையி லான பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் வேட்பாளராக முன்னி றுத்த திட்டமிடப்பட்டிருந்த பிரேம் சிங் ஷக்கியா, கடைசி நேரத் தில் பாஜகவில் இணைந்தார். இதனால், பிரேம் சிங்கையே வேட்பாளராக பாஜக அறிவித்த தால் ஆத்திரமடைந்த மாயாவதி, இந்தத் தொகுதியில் தனது கட்சி போட்டியிடாது என அறிவித்தார்.

எனினும், மெயின்புரியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவு அளிக்கப்படும் என பகுஜன் சமாஜ் அறிவித்துள்ளது. முலாய மின் குடும்பத்தைச் சேர்ந்தவர் போட்டியிடுவதால் அவர் மீது உள்ள நட்பு காரணமாக மெயின் புரியில் மட்டும் வேட்பாளரை நிறுத்துவதில்லை என காங்கிரஸ் தலைமை முடிவெடுத்துள்ளது.

எனவே, மெயின்புரியில் சமாஜ்வாதிக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகி றது. இங்கு முலாயம் சிங், தனது மகனும் உபி முதல்வருமான அகிலேஷ் சிங்குடன் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.

இதுகுறித்து, ‘தி இந்து’விடம் காங்கிரஸ் கட்சியின் உபி மேற்குப் பகுதி துணைத்தலைவர் நபீஸ் அகமது ஷெர்வானி கூறும்போது, “இடைத்தேர்தல் நடைபெற உள்ள 11 சட்டசபை தொகுதிகளில் இரண்டு ரிசர்வ் தொகுதிகள் இருந்தும் அவற்றை பகுஜன் சமாஜ் கட்சி புறக்கணித்து விட்டது. பாஜகவுக்கு மறைமுக மாக ஆதரவு தரும் பொருட்டு மாயாவதி இந்த இடைத்தேர்தலில் பின் வாங்கி விட்டார். இந்த தொகு திகளில் நாங்கள் கண்டிப்பாக வெல்வோம்” என்றார்.

மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ராவால் காலியான லக்னோ கிழக்கு தொகுதியில், பாஜகவின் மூத்த தலைவர் லால்ஜி டாண்ட ணின் மகன் கோபால் டாண்டன் போட்டியிடுகிறார். இங்கு போட்டி யிடும் சுயேச்சை வேட்பாளருக்கு பகுஜன் சமாஜ் ஆதரவு அளித்துள்ளது. இதைப்போல் மற்றொரு முக்கிய தொகுதியாக ரோஹனியா கருதப்படுகிறது.

அப்னா தளத்தின் தலைவர் கிருஷ்ணா பட்டேல் போட்டியிடும் இந்த தொகுதி, அவரது மகள் அனுபிரியா பட்டேலால் காலி செய்யப்பட்டது.

மாநிலத்தின் மேற்குப் பகுதி யில் உள்ள சஹரான்பூர் சதர், நொய்டா, பிஜ்னோர், மொரதா பாத் மாவட்டத்தில் உள்ள தாக்கூர் துவாரா, புலந்த ஷெஹர் மாவட்டத்தின் சர்காரி மற்றும் ஹமீர்பூர் ஆகிய ஆறு தொகுதிகள், அடிக்கடி மதக் கலவரங்களுக்கு உள்ளாகும் மிகவும் பதற்றமான தொகுதிகள் ஆகும். எனவே, அங்கு சமாஜ் வாதிக்கும் பாஜக வுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.

இந்த இடைத்தேர்தல் முடிவு களால் சமாஜ்வாதி கட்சி தலைமை யிலான அரசுக்கு ஆபத்தில்லை. ஆனால், மக்களவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 80 தொகு திகளில் 71-ல் பாஜக வெற்றி பெற்றது. எனவே, அடுத்து வர விருக்கும் சட்டசபை தேர்தலுக் கான முன்னோட்டமாக கருதுவ தால் கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் பாஜகவுக்கு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x