Last Updated : 04 Apr, 2019 09:01 AM

 

Published : 04 Apr 2019 09:01 AM
Last Updated : 04 Apr 2019 09:01 AM

அருணாச்சல் முதல்வருடன் வந்த காரில் ரூ.1.8 கோடி பணம் சிக்கியுள்ளது: காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு

காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அருணாச்சலபிரதேசத்தில் வாக்காளர்களை ஈர்க்க பாஜக பண பலத்தை பயன்படுத்துகிறது. இம்மாநிலத்தின் பசிகாட் நகரில் பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை காலை பேசினார். இதற்கு சில மணி நேரத்துக்கு முன் நள்ளிரவில் இங்கு முதல்வர், துணை முதல்வர், மாநில பாஜக தலைவர் ஆகியோருடன் வந்த வாகனங்களில் ஒன்று சோதனையிடப்பட்டது. இளைஞர் காங்கிரஸார் புகாரின் பேரில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் ரூ.1.8 கோடி பணம் சிக்கியுள்ளது. இது தொடர்பாக 2 வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்? பிரதமர் மோடி கலந்துகொண்ட கூட்டத்துக்கு இந்தப் பணம் எடுத்துச் செல்லப்பட்டதா? இவ்வளவு பெரிய தொகை எங்கிருந்து வந்தது? இது தொடர்பாக முதல்வர் பெமா காண்டு, துணை முதல்வர் சவ்னா மெயின், மாநில பாஜக தலைவர் தபீர் காவ், பிரதமர் மோடி ஆகியோருக்கு எதிராக தேர்தல் ஆணையம் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். முதல்வர், துணை முதல்வரை உடனே பதவியிலிருந்து நீக்க வேண்டும். இவ்வாறு சுர்ஜிவாலா கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x