Published : 16 Sep 2014 08:51 AM
Last Updated : 16 Sep 2014 08:51 AM

எய்ம்ஸ் மருத்துவ முதுநிலை படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: நவம்பர் 9-ல் நுழைவுத் தேர்வு

எய்ம்ஸ் கல்வி நிறுவனத்தில் முதுநிலை படிப்பு படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

டெல்லியில் உள்ள மத்திய அரசு மருத்துவக் கல்லூரியான அகில இந்திய மருத்துவ கல்வி நிறுவனத்தில் (எய்ம்ஸ்) எம்.டி., எம்.எஸ்., எம்.சிஎச். ஆகிய மருத்துவ முதுநிலை படிப்புகளில் 2015-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம் உள்பட நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நவம்பர் 9-ம் தேதி நடத்தப்பட உள்ளது.

இதில் சேர விரும்பும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். பட்டதாரிகள் www.aiimsexams.org என்ற இணையதளத்தில் 18-ம் தேதி முதல் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம். அக்டோபர் 16-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று எய்ம்ஸ் உதவி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அறிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x