3-வது கட்ட மக்களவைத் தேர்தல்: 14 மாநிலங்களில் உள்ள 116 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது

3-வது கட்ட மக்களவைத் தேர்தல்: 14 மாநிலங்களில் உள்ள 116 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது
Updated on
2 min read

மக்களவைத் தேர்தலில் 3-வது கட்டமாக 14 மாநிலங்கள்,2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 116 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மக்களவைக்கு முதல்கட்டமாக கடந்த 11ம் தேதி 91 தொகுதிகளுக்கும்,  2வது கட்டமாக கடந்த 18-ம் தேதி 95 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்தது.

குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும், கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கும் இன்று  ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. அதேபோல கர்நாடகவில் 2-வது கட்டமாக மீதமுள்ள 14 தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடக்கிறது.

இதுதவிர கோவா 2 தொகுதிகள், அசாம் 4 தொகுதிகள், பிஹார் 5 தொகுதிகள், சத்தீஸ்கரில் 7தொகுதிகள், ஜம்மு-காஷ்மீர், திரிபுராவில் தலா ஒரு தொகுதி, மகாராஷ்டிராவில் 14  தொகுதிகள்,  ஒடிஸாவில்6 தொகுதிகள், உ.பி.யில் 10 தொகுதிகள், மேற்கு வங்கம் 5 தொகுதிகள் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடக்கிறது.

யூனியன் பிரதேசங்களில்  தாத்ரா- நாகர் ஹவேலி , டாமன் டையூ ஆகியவற்றில் தலா ஒருதொகுதியில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.  

3ஆம் கட்டத் தேர்தலில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா குஜராத்தின் காந்திநகர் தொகுதியிலும்,  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திபோட்டியும் வயநாடு தொகுதி, சமாஜவாதிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் போட்டியிடும் மெயின்புரி,  காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே போட்யிடும் குல்பர்கா,  முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் போட்டியிடும் திருவனந்தபுரம் தொகுதி ஆகியவை கவனம் பெற்றுள்ளன.

2ஆவது கட்டத் தேர்தலின்போது, திரிபுரா கிழக்கு மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு, சட்டம்-ஒழுங்கு பிரச்னை  காரணமாக  இன்று (ஏப்.23) ஒத்திவைக்கப்பட்டது. இந்த தொகுதிக்கும் இன்று தேர்தல் நடக்கிறது.

கேரளாவில் உள்ள 20 மக்களவைத் தொகுதிகளில் மொத்தம் 23 பெண் வேட்பாளர்கள் உள்பட 227 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தற்போது எம்.பி.யாக இருப்பவர்களில் 13 பேர், 9 எம்எல்ஏக்கள், கட்சியின் செயலாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

குறிப்பாக காங்கிரஸ் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வயநாடு தொகுதியிலும், திருவனந்தபுரத்தில்  மூத்த தலைவர் சசிதரூர், மலப்புரத்தில் பி.கே.குஞ்சாலிக்குட்டி, கொல்லத்தில் எம்.கே. பிரேமச்சந்திரன், எர்ணாகுளத்தில் ஹிபி ஈடன், சாலக்குடியில் இன்னோசென்ட் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

கேரளாவில் மொத்தம் 2.61 கோடி ஆண் ,பெண் வாக்காளர்களும், 173 மூன்றாம் பாலினத்தவர்களும் வாக்களிக்க இருக்கிறார்கள். 18 வயது முதல் 19வயது வரை உள்ள முதல்முறை வாக்காளர்கள் மட்டும் 2.88 லட்சம் பேர் இருப்பது குறிப்பிடத்தக்கது.

வாக்குப்பதிவுக்காக மாநிலத்தில் 24 ஆயிரத்து 970 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in