Published : 08 Apr 2019 11:45 am

Updated : 08 Apr 2019 11:45 am

 

Published : 08 Apr 2019 11:45 AM
Last Updated : 08 Apr 2019 11:45 AM

கொள்கையுடன் இருக்கும் ஒரே கட்சி பாஜகதான்: ராஜ்நாத் சிங்

கொள்கையுடன் இருக்கும் ஒரே கட்சி பாஜகதான் என்று பாஜக மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

'தி இந்து' ஆங்கில இதழுக்குப் பேட்டியளித்த ராஜ்நாத் சிங்கிடம், இரண்டு கொள்கைகளுக்கு இடையிலான போட்டி இந்தத் தேர்தல் என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த ராஜ்நாத், ''கொள்கைகளுக்கு இடையே மோதல் எதுவும் இல்லை. ஏனெனில் ஒரே ஒரு கட்சி மட்டுமே கொள்கையோடு இருப்பதாக நம்புகிறேன். அது பாஜகதான்.

காங்கிரஸிடம் கொள்கை எதுவும் இல்லை. அவர்கள் செய்வது ஒரேயொரு வேலைதான். மக்களை ஏமாற்றி, எப்படியாவது ஆட்சியைப் பிடிப்பதுதான். அவர்களின் தேர்தல் அறிக்கை மக்களைத் திசைதிருப்பும் நாடகம்.

குறிப்பாக குறைந்தபட்ச வருமான உத்தரவாதம் ஒவ்வொரு முறையும் வறுமையை ஒழிப்போம் என்று கூறியவர்கள், ஆட்சிக்கு வந்தபின் அதைச் செய்யத் தவறிவிட்டனர்'' என்றார் ராஜ்நாத் சிங்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!


    கொள்கைகட்சி பாஜகராஜ்நாத் சிங்

    Sign up to receive our newsletter in your inbox every day!

    You May Like

    More From This Category

    More From this Author