

பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு நாள் பயணமாக நாளை ஜம்மு காஷ்மீர் செல்கிறார்.
மத்திய உள்துறை அமைச்சராக பதவியேற்ற பின் ராஜ்நாத் சிங் ஜம்மு - காஷ்மீருக்கு பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.
இந்த பயணத்தின்போது காஷ்மீரில் இருந்து வெளியேறிய பண்டிட்டுகளை மீண்டும் காஷ்மீரில் குடியேற்றுவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து மாநில உயர் அதிகாரிகளுடன் அவர் முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார். ஜக்தி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புலம் பெயர்ந்தவர்களுக்கான குடியிருப்பையும் அவர் பார்வையிடுகிறார்.
ஜம்முவில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி வரும் நிலையில், எல்லையோர பகுதிகளிலும் அவர் ஆய்வு மேற்கொள்கிறார்.
ஆர்.எஸ்.புரா, அர்னியா பகுதிகளில் சர்வதேச எல்லைப் பகுதியிலும் அவர் ஆய்வு மேற்கொள்கிறார். ராணுவ உயர் அதிகாரிகளுடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்கிறார்.