Published : 07 Mar 2019 05:26 PM
Last Updated : 07 Mar 2019 05:26 PM

காஷ்மீர் சிறுவியாபாரிகளைத் தாக்கியவர் கைது: உ.பி. போலீஸாருக்கு நடிகை ரவீனா பாராட்டு

காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த சிறுவியாபாரிகளைத் தாக்கியவரைக் கைது செய்த் உத்தரப் பிரதேச போலீஸாரை பாலிவுட் நடிகை ரவீனா டண்டன் பாராட்டியுள்ளார்.

முன்னதாக, உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் தாலிகஞ்ச் பகுதியில் காஷ்மீர் இளைஞர்கள் இருவர் தாக்கப்பட்டனர்.

தாலிகஞ்ச் சந்தையில் உலர் பழங்கள் விற்றுக் கொண்டிருந்த காஷ்மீரைச் சேர்ந்தவரை காவி உடை அணிந்த சிலர் தாக்கினர். திடீரென வன்முறையில் ஈடுபட்ட கும்பலிடமிருந்து சில அடிகளை வாங்கிய பின்னர் அந்த நபர் அங்கிருந்து தப்பித்தார்.

அடுத்ததாக மற்றொரு காஷ்மீர் வியாபாரியை நெருங்கும் அந்த கும்பல் அவரையும் தாக்கியது. அதற்குள் அக்கம் பக்க கடைக்காரர்கள் வந்து அவர்களைத் தடுத்து போலீஸுக்கு தகவல் கொடுத்தனர். இந்த சம்பவம் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

காஷ்மீர் வியாபாரிகள் தாக்கப்பட்டதைக் கண்டித்து பல்வேறு பிரபலங்களும் தங்களது கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வரிசையில் பாலிவுட் நடிகை ரவீனா டண்டனும் ட்வீட் செய்துள்ளார். சம்பந்தப்பட்ட நபரை உத்தரப் பிரதேச போலீஸார் விரைந்து கைது செய்தமைக்கு பாராட்டு தெரிவித்தார்.

அதில், "இவரைப் போன்றோர் வெளியில் நடமாடக்கூடாது. சிறையில் அடைத்ததோடு சாவியைத் தூக்கி எறிந்து விடுங்கள். தாக்குதலில் ஈடுபட்டபோது அவர் அணிந்திருந்த அந்த காவி நிற உடையை அவரிடம் கொடுத்து சிறைச்சாலையை துடைக்க வையுங்கள். உடனடி நடவடிக்கை எடுத்த உ.பி. போலீஸாருக்கு பாராட்டு" எனப் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x