பெயர் குழப்பத்தால் ரேட்டிங் குறைக்கப்பட்ட மைக்ரோசாஃப்ட் எக்ஸல்

பெயர் குழப்பத்தால் ரேட்டிங் குறைக்கப்பட்ட மைக்ரோசாஃப்ட் எக்ஸல்
Updated on
1 min read

பெயர் குழப்பத்தால் கூகுள் ப்ளே ஸ்டோரில் தனது ரேட்டிங்கை இழந்துள்ளது மைக்ரோசாஃப்ட் எக்ஸல் செயலி.

துணி துவைக்கும் பவுடர் பிராண்டான சர்ஃப் எக்ஸல் வெளியிட்ட விளம்பரம் சர்ச்சைக்குள்ளான நிலையில் ட்விட்டரில் #BoycottSurfExcel என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டானது.

இந்நிலையில் கூகுள் ப்ளே ஸ்டோரில் சர்ஃப் எக்ஸல் ஆப்-க்குப் பதிலாக மைக்ரோசாஃப்ட் எக்ஸலை டவுன்ரேட் செய்ய அதன் ரேட்டிங் வெகுவாகக் குறைந்துள்ளது.

ஹோலி பண்டிகையை ஒட்டி இந்து - முஸ்லிம் ஒற்றுமையை மையப்படுத்தி விளம்பரப் படம் ஒன்றை சர்ஃப் எக்ஸல் வெளியிட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 28-ல் இந்த விளம்பரம் வெளியானது. அந்த விளம்பரத்தில் ஒரு குறுகிய தெருவுக்குள் கூடியிருக்கும் சிறுவர்கள் ஹோலி கொண்டாடுகின்றனர். மாடியில் நின்றுகொண்டு வருவோர் செல்வோர் மீது வண்ணங்களை வீசி எறிந்து விளையாடுகின்றனர்.

அப்போது வெள்ளை உடை அணிந்து சைக்கிள் ஒன்றில் பயணிக்கும் சிறுமியைக் குறிவைத்து அருகில் உள்ள வீடுகளில் வசிக்கும் சிறுவர், சிறுமியர் வண்ணங்களால் ஆன நீர் பந்துகளை வீசுகிறனர். வழக்கத்துக்கு மாறாக அதிலிருந்து தப்பிக்காமல் எல்லா குழந்தைகளும் தங்களிடமிருக்கும் வண்ண நீர் பந்துகளை வீசி தீர்க்கும் வரை அந்தச் சிறுமி காத்திருக்கிறார்.

பிறகு அந்த வண்ணங்கள் தீர்ந்த பிறகு, அருகில் உள்ள வீட்டிலிருக்கும் வெள்ளை உடை அணிந்த முஸ்லிம் சிறுவனை அழைக்கிறார். அவரை சைக்கிளில் ஏற்றிக்கொண்டு மசூதியில் விடுகிறார். கறை நல்லது என்ற அவர்களின் வாசகத்தோடு விளம்பரம் முடிகிறது.

இந்த விளம்பரத்துக்குக் கலவையான விமர்சனங்கள் வந்தன. சிலர் இதனை வரவேற்றனர். சிலர், இந்து மதப் பண்டிகையைக் குறைத்து மதிப்பிட்டிருப்பதாகக் கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து  ட்விட்டரில் #BoycottSurfExcel என்ற ஹேஷ்டேக் ட்ரண்டானது.

இந்நிலையில், கூகுள் ப்ளே ஸ்டோரில் பலரும் சர்ஃப் எக்ஸல் ஆப்பை டவுன்ரேட் செய்யத்தொடங்கினர்.

ஆனால், குழப்பத்தில் பலரும் சர்ஃப் எக்ஸலுக்குப் பதிலாக மைக்ரோசாஃப்ட் எக்ஸலை டவுன் ரேட் செய்ததோடு கீழே பின்னூட்டங்களிலும் தங்கள் கருத்துகளைக் கொந்தளித்துப் பகிர்ந்திருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in