2 தொகுதிகளில் போட்டியிடும் நவீன் பட்நாயக்

2 தொகுதிகளில் போட்டியிடும் நவீன் பட்நாயக்
Updated on
1 min read

ஒடிசா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

ஒடிசா மாநிலத்தில், மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவைத் தேர்தலும் சேரந்தே நடைபெறுகிறது. இம்மாநிலத்தில் முதல்வராக பிஜூ ஜனதாதளக் கட்சியின் நவீன் பட்நாயக் தொடர்ந்து நான்க முறை பதவி வகித்து வருகிறார். பிஜூ ஜனதாதளம் - காங்கிரஸ் என இருக்கட்சி ஆதிக்கம் இருந்து வந்த ஒடிசாவில் சமீபகாலமாக பாஜகவும் பலம் பெற்று வருகிறது. இதனால் இந்த தேர்தலில் மும்முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பிஜூ ஜனதாதளக் கட்சியின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஒடிசாவில் மொத்தம் 21 மக்களவைத் தொகுதிகளும், 147 சட்டப்பேரவைத் தொகுதிகளும் உள்ளன.  முதல்கட்ட பட்டியலில் 9 மக்களவைத் தொகுதிகளுக்கும், 54 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதில் முதல்வர் நவீன் பட்நாயக் 2 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடுகிறார். வழக்கமாக போட்டியிடும் ஹின்ஜிலி தொகுதியுடன் கூடுதலாக பிஜிபூர் தொகுதியிலும் போட்டியிடுகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in