Last Updated : 27 Mar, 2019 10:08 AM

 

Published : 27 Mar 2019 10:08 AM
Last Updated : 27 Mar 2019 10:08 AM

கோவாவில் அரசியலில் திடீர் திருப்பம்: கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் நள்ளிரவில் பாஜகவில் இணைந்தனர்: துணை முதல்வர் பதவி பறிப்பு?

கோவா மாநிலத்தில் திடீர் அரசியல் திருப்பமாக ஆளும் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்து வந்த மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சியைச்(எம்ஜிபி) சேர்ந்த 3 எம்எல்ஏக்களில் 2 பேர் அந்த கட்சியில் இருந்து விலகி பாஜகவில் நள்ளிரவில் இணைந்தனர்.

இவர்கள் பாஜகவில் இணைந்ததை சபாநாயகர் நள்ளிரவில் ஏற்றுக்கொண்டார். இந்த கட்சியின் ஒரு எம்எல்ஏ, முதல்வர் பதவிக்காக பிரச்சினை செய்து, துணை முதல்வர் பதவி பெற்றார். இப்போது இரு எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்ததால், துணை முதல்வராக இருக்கும் சுதின் தாவில்கர் பதவி விரைவில்  பறிக்கப்படுகிறது.

இனி காங்கிரஸால் முடியாது

அந்த பறிக்கப்படும் பதவி, புதிதாக இணைந்த இரு எம்எல்ஏக்களில் ஒருவருக்கு வழங்க பாஜக திட்டமிட்டுள்ளது. இதனால் 36 உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவையில் தற்போது காங்கிரஸ் கட்சிக்கு 14 எம்எல்ஏக்கள் உள்ளனர், பாஜகவுக்கு 12 எம்எல்ஏக்கள் இருந்த நிலையில் தற்போது 2 எம்எல்ஏக்கள் இணைந்ததால், காங்கிரஸ் கட்சிக்கு இணையாக 14 எம்எல்ஏக்களாக உயர்ந்துள்ளது.

இதனால், இனிமேல் தனிப்பெரும் கட்சி என்று காங்கிரஸ் கூறிக்கொண்டு ஆளுநரிடம் என்று ஆட்சி அமைக்க மனுஅளிக்க முடியாது.

மக்கள் விருப்பம்

இதுகுறித்து எம்ஜிபி கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த பவாஸ்கர் நிருபர்களிடம் கூறுகையில், " எம்ஜிபி கட்சியில் இருந்து விலகி நள்ளிரவில் 1.45 மணிக்கு பாஜகவில் இணைந்தோம். எங்கள் விருப்பபடி நாங்கள் பாஜகவில் சேரவில்லை, மக்களின் விருப்பத்தின்படியே சேர்ந்தோம். என்னுடைய தொகுதி மக்கள் என்னை பாஜகவில் இணையுமாறு கூறினார்கள் " எனத் தெரிவித்தார்.

பாரிக்கர் மறைவு, குழப்பம்

கோவா மாநிலத்தில் பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. பாஜக, தலா 3 எம்எல்ஏக்கள் கொண்ட மகாராஷ்டிரா கோமந்தக் கட்சி, கோவா பார்வேர்டு கட்சி, 3 சுயேட்சைகள் ஆகியோரின் ஆதரவில் ஆட்சி நடந்தது. மனோகர் பாரிக்கர் மறைவுக்குப் பின், யார் முதல்வர் என்று கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே போட்டி ஏற்பட்டதால், மாநில அரசியலில் குழப்பமான சூழல் நிலவியது.

கோமந்தக் கட்சியும், கோவா பார்வேர்டு கட்சியும் முதல்வர் பதவியைக் கோரின. இதனியைடேய நீண்ட பேச்சுக்குப் பின், இரு கட்சியின் தலைவர்களுக்கும் துணை முதல்வர் பதவி வழங்கி பாஜக சமாதானம் செய்தது.  

மகாராஷ்டிராவாடி கோமந்தக் கட்சியின் தலைவர் சுதின் என்ற ராமகிருஷ்ண தாவில்கர், கோவா பார்வேர்ட் கட்சியின் தலைவர் விஜய் சர்தேசாய் ஆகியோர் துணை முதல்வராக பதவியேற்றனர். அதன்பின் 23-ம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் பிரமோத் சாவந்த் பெரும்பான்மையை நிரூபித்தார்.

நள்ளிரவில் நடந்த சம்பவம்

இந்நிலையில், மகாராஷ்டிரவாடி கோமந்த்தக் கட்சியில் 3 எம்எல்ஏக்கள் இருந்தனர். அதில் இருவர் அமைச்சர்களாகவும், ஒருவர் துணை முதல்வராக இருந்தார். இதில் அமைச்சர்களாக இருந்த இரு எம்எல்ஏக்களான, மனோகர் அஜ்கோன்கர், தீபக் பவாஸ்கர் ஆகியோர் தங்களின் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் நள்ளிரவில் 1.45 மணிக்கு சேர்ந்தனர்.

 அதற்கான கடிதத்தையும் அப்போது சபாநாயகர் மைக்கேல் லோபோவைச் சந்தித்து அளித்தனர். இதை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் லோபா கடித்துக்கு ஒப்புதல் அளித்தார்.

ஆனால், துணை முதல்வராக இருக்கும் மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சியைச் சேர்ந்த சுதின் தாவிவலிகர் மட்டும் பாஜகவில் தங்களுடையகட்சியை இணைக்க சம்மதம் தெரிவித்து கடிதம் அளிக்கவில்லை. இதனால், இவரின் துணை முதல்வர் பறிக்க பாஜக முடிவு செய்துள்ளது.

கட்சிதாவலா?

ஒரு கட்சியில் இருந்து மூன்றில் இரு பங்கு உறுப்பினர்கள் மற்றொரு கட்சியில் சேர்ந்தால், அது கட்சித்தாவல் தடை சட்டத்தில் சேராது, கட்சித்தாவலில் நடவடிக்கை ஏதும் எடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

கூட்டணி கட்சிக்கு ஏற்பட்ட நிலை

goa-congrespngகோவா காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சுனில் :ப டம் ஏஎன்ஐ100 

கோவா மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்க கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து ஆதரவு அளித்தது மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சி(எம்ஜிபி). ஆனால், கூட்டணி தர்மத்தை மதிக்காமல், தங்களுக்கு ஆதரவு அளித்த எம்ஜிபி கட்சி என்றும் கூட பாராமல், கட்சியை உடைத்து, அதில் உள்ள எம்எல்ஏக்களை இழுத்து தங்கள் கட்சியில் சேர்த்துக் கொண்டுள்ளது பாஜக என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் சுனில் காவ்தன்கர் தெரிவித்தார்.

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x