ஜார்க்கண்ட் காவல் துறை முன்பு 16 மாவோயிஸ்ட்கள் சரண்

ஜார்க்கண்ட் காவல் துறை முன்பு 16 மாவோயிஸ்ட்கள் சரண்
Updated on
1 min read

ராஞ்சி: ஜார்க்கண்டில் 5 பெண்கள் உட்பட 16 மாவோயிஸ்ட்கள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு ராஞ்சி காவல்துறையினர் முன்பு சரணடைந்துள்ளனர்.

இது குறித்து ஜார்க்கண்ட் காவல் துறை இயக்குநர் ஜெனரல் (டிஜிபி) ததாஷா மிஸ்ரா கூறும்போது, “சரணடைந்தவர்களில் 6 பேர் மீது மொத்தம் ரூ.39 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் தடைசெய்யப்பட்ட சிபிஐ (மாவோயிஸ்ட்) அமைப்பின் பிராந்தியக் குழு உறுப்பினரும், 128 வழக்குகளில் தேடப்பட்டு வந்தவரும், ரூ.15 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டவருமான சந்தோஷ் மஹ்தோ என்ற வாசுதேவ் டா என்ற திலீப் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.

78 வழக்குகளில் தேடப்பட்டு வந்தவரும், ரூ.10 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டவருமான சிபிஐ (மாவோயிஸ்ட்) மண்டலக் குழு உறுப்பினர் சந்தன் லோஹ்ராவும் சரணடைந்துள்ளார்” என்றார்.

ஜார்க்கண்ட் காவல் துறை முன்பு 16 மாவோயிஸ்ட்கள் சரண்
கட்டுமான பொருட்கள் கொண்டுசெல்ல தமிழக அரசு தளர்வு அளிக்க வேண்டும்: கேரள முதல்வர் கோரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in