

2019 லோக்சபா தேர்தலுக்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி பிஹாரில் 39 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்தது. பிஹாரில் நிதிஷ் குமார்-பாஜக கூட்டணி தலா 17 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
இதில் பாஜக அறிவித்த 17 வேட்பாளர்களில் 10 வேட்பாளர்கள் உயர் சாதிப்பிரிவைச் சேர்ந்தவர்கள். 5 பேர் பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினையும் ஒருவர் பொருளாதார ரீதியாகப் பின் தங்கியப் பிரிவையும், ஒரேயொருவர் தாழ்த்தப்பட்டப் பிரிவையும் சேர்ந்தவர்கள்.
பாட்னாசாஹிப் டிக்கெட் சத்ருகன் சின்ஹாவுக்கு மறுக்கப்பட்டு உயர்சாதி கயஸ்தா பிரிவைச் சேர்ந்த ரவிசங்கர் பிரசாத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
அதே போல் தார்பங்கா தொகுதியில் எம்.எல்.ஏ.விம் பார்ப்பண வகுப்பைச் சேர்ந்தவருமான கோபால்ஜி தாக்கூரை வேட்பாளராக அறிவித்துள்ளது.
பாஜகவுக்கு மாறாக ஐக்கிய ஜனதாதளம் 6 ஓபிசி பிரிவு வேட்பாளர்களுக்கும் சில பொருளாதார பின்னடைவு பிரிவினருக்கும் சீட் அளித்துள்ளது. 2 உயர்சாதி, 2 தாழ்த்தப்பட்ட பிரிவு, ஒரு முஸ்லிம் வேட்பாளரும் ஜேடியுவில் அடங்கும்.