ரஃபேல் ஒப்பந்தத்திற்கு பாகிஸ்தான் சான்றிதழ் தேவையா ராகுல்? : மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சாடல்

ரஃபேல் ஒப்பந்தத்திற்கு பாகிஸ்தான் சான்றிதழ் தேவையா ராகுல்? : மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சாடல்
Updated on
1 min read

ரஃபேல் விவகாரத்தில் ராகுல் காந்தி வெளிப்படையாக பொய்களைக் கூறிவருவதாக சாடிய பாஜக, ராகுல் காந்திக்கு இந்திய விமானப்படையின் மீதும் நம்பிக்கையில்லை, உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மீதும் நம்பிக்கையில்லை. பின் என்ன? பாகிஸ்தான் சான்றிதழ் கொடுத்தால்தன ரஃபேல் ஒப்பந்தத்தை நம்புவாரா? என்று கேட்டுள்ளது.

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக தி இந்து (ஆங்கிலம்) நாளிதழில் என்.ராம் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வரும் நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மோடி உட்பட அனைவரையும் விசாரிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்நிலையில் பாஜக, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மூலம் ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்துள்ளது.

“நான் ராகுல் காந்தியின் அடிப்படை ஆதாரமற்ற பொய்களை கடுமையாகக் கண்டிக்கிறேன். அவருக்கு இந்திய விமானப்படையினரிடத்திலும் நம்பிக்கையில்லை, உச்ச நீதிமன்றம் இதில் எந்த வித முறைகேடுகளும் நடக்கவில்லை என்று கூறியதையும் அவர் நம்பவில்லை. தலைமைக் கணக்கு தணிக்கை அதிகாரியையும் நம்பவில்லை.

ரஃபேல் குறித்து பாகிஸ்தானிடமிருந்து ராகுல் காந்திக்கு நற்சான்றிதழ் தேவைப்படுகிறதோ? இதற்கு நாங்கள் ஒன்றும் உதவிபுரிய முடியாது. இப்போதெல்லாம் இந்திய ராணுவத்தை விடவும் நம் தலைவர்களை விடவும் பாகிஸ்தானைத்தான் அவர் அதிகம் நம்புகிறார்” என்ரு ரவிசங்கர் பிரசாத் சாடியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in