Published : 18 Mar 2019 06:44 PM
Last Updated : 18 Mar 2019 06:44 PM

"மக்களை நசுக்கும் அரசு, எதிர்த்தால் தேசவிரோத சட்டம்": பிரதமர் மோடியைச் சாடிய பிரியங்கா காந்தி

மக்களை நசுக்கு பிரதமர் மோடி தலைமையலான அரசு, எதிர்த்து கேள்வி கேட்பவர்கள் மீது தேசவிரோத சட்டத்தின் கீழ் கைது செய்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாகச் சாடினார்.

உத்தரப்பிரதேசத்தின் கிழக்கு மண்டல தேர்தல் பொறுப்பாளராகவும், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராகவும் பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். 3 நாட்கள் தேர்தல் பிரச்சாரத்தில் பிரியங்கா காந்தி ஈடுபட்டுள்ளார்.

முதல்நாளான இன்று கங்கை நதிவழியாக படகில் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் பிரியாங்கா ஈடுபட்டார். பெரும்பாலான நிஷாத், மால்லா சமூகத்தினர் கங்கை நதிக்கரையின் ஓரத்தில் வசிப்பதால், அவர்களை படகின் மூலம் சென்று சந்தித்து தேர்தல் பிரச்சாரத்தில் பிரியங்கா காந்தி ஈடுபட்டார்.

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட வந்திருக்கும் பிரியங்கா காந்திக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் சிறப்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

முன்னாதாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் முன் கங்கை நதிக்கரையில் பிரியங்கா காந்தி வழிபாடு நடத்தினார். அதன்பின் படகில் மிகவும் மெதுவாகச் சென்று ஒலிபெருக்கி மூலம் மக்களிடம்பேசி வாக்குகளைச் சேகரித்தார்.

அப்போது பிரியாங்கா காந்தி பேசியதாவது:

இப்போது மோடி அரசின் முன் எந்த ஒரு விஷயத்தையும், பிரச்சினையையும் எழுப்பினால், நாம் நசுக்கப்படுகிறோம், லத்தியால் தாக்கப்படுகிறோம், தேசவிரோதி என்று குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறோம்.

இந்த அரசை எதிர்த்து கேள்வி கேட்பவர்கள், பேசுவர்கள் மீது தேசவிரோத சட்டம் பாய்கிறது. மக்கள் அனைவரும் ஒன்றைபுரிந்து கொள்ள வேண்டும், இந்த தேசம் அனைவருக்குமானது. இந்த தேசம் உங்களுடையது, ஜனநாயகம் உங்களுடையது, இந்த அரசியல்கூட உங்களுடையதுதான். மக்கள்தான் எஜமானார்கள். மக்கள் இல்லாமல் இந்த பிரியங்கா காந்தி இல்லை. இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்தார்.

பிரியங்கா காந்தி தனது பிரச்சாரத்தை முடித்துவிட்டு கரைக்குத் திரும்பியபின், தனது பாதுகாப்பு மரபுகளை மீறி, பெண்கள், குழந்தைகள், தொண்டர்களுடன் கைகுலுக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 25-க்கும் மேற்பட்ட பெண் மாணவிகளுடன் கல்வி தொடர்பாக உரையாடி மகிழ்ந்தார் பிரியங்கா காந்தி.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x