

அசாம் மாநிலத்தில் வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது.
அசாமில் பெய்த கனமழை காரணமாக 13 மாவட்டங்களைச் சேர்ந்த 10 லட்சம் மக்கள் பாதிக் கப்பட்டுள்ளனர். பெரும்பாலான மக்கள் வீடிழந்துள்ளனர்.
நேற்று மேலும் நான்கு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. முதல்வர் தருண் கோகோய், ‘வெள்ளத்தால் 36 பேர் உயிரிழந்ததாகத் தெரிய வந்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும்’ எனத் தெரிவித்துள்ளார். மழை நின்று விட்டாலும் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. குடியிருப்புப் பகுதிகளிலும் வேளாண் நிலங்க ளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளது.
162 முகாம்கள்
சுமார் 1.5 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, 162 நிவாரண முகாம்களில் தங்கவைக் கப்பட்டுள்ளனர். கோல்பாரா மாவட்டத்திலுள்ள தேசிய நெடுஞ் சாலை வெள்ளத்தில் மூழ்கி யுள்ளது. கம்ருப் மாவட்ட ஊரகப் பகுதியில் சில குடும்பத்தினர் அனைவரும் உயிரிழந்ததால், நான்கு குழந்தைகள் ஆதரவற்றவர் களாக மாறியுள்ளனர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களில் ஒரு பகுதியினருக்கு போதிய உணவு வழங்கப்படவில்லை என குற்றச் சாட்டு எழுந்துள்ளது.
இந்த வார தொடக்கத்தில், பெய்த கனமழையால் அசாம், மேகாலயா, அருணாச்சல் பிரதேச மாநிலங்களில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ளன. அசாமின் கோல்பாரா மாவட்டம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.