ஹரியாணா தேர்தலில் ‘மோடி அலை’ வீசும்: பாரதிய ஜனதா கட்சி நம்பிக்கை

ஹரியாணா தேர்தலில் ‘மோடி அலை’ வீசும்: பாரதிய ஜனதா கட்சி நம்பிக்கை
Updated on
1 min read

வரும் அக்டோபர் 15-ல் நடைபெற விருக்கும் ஹரியாணா மாநில சட்டசபை தேர்தலிலும் மோடி அலை வீசும் என பாஜக நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறுவதற்கு, மோடி அலை காரணம் எனக் கூறப்பட்டது. இந் நிலையில் மாநில சட்டசபைத் தேர்தல்களிலும் மோடி அலை, பாஜகவுக்கு சாதகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இது குறித்து ‘தி இந்து’விடம் ஹரியாணா மாநில பாஜக செய்தி தொடர்பாளர் வீரேந்தர் சிங் சவுகான் கூறியதாவது:

பிரதமர் மோடி பங்கேற்கும் பிரச் சாரக் கூட்டம் குறைந்தது 10 இடங் களில் நடைபெறும். மொத்தமுள்ள 90 தொகுதிகளிலும் பாஜக தனித் துப் போட்டியிடுகிறது. மக்கள வைத் தேர்தலின்போது வீசிய ’மோடி அலை’ சட்டசபையிலும் பாஜகவுக்கு மாபெரும் வெற்றி யைத் தேடித் தரும்” என்றார்.

சுஷ்மாவின் சகோதரி போட்டி

நரேந்திர மோடி தவிர, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் சுஷ்மா ஸ்வராஜ், ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, ஸ்மிருதி இரானி, ரவிசங்கர் பிரசாத் உட்பட பல மூத்த தலைவர்கள் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்கவுள்ள னர். இத்தேர்தலில் சுஷ்மாவின் சகோதரி வந்தனாவும் போட்டி யிடுகிறார்.

பாஜகவின் எதிர்பார்ப்பு

ஹரியாணா மாநிலத்தில் மொத்தம் உள்ள பத்து மக்களவை தொகுதிகளில் 8-ல் போட்டி யிட்ட பாஜகவுக்கு 7-ல் வெற்றி கிடைத்தது.

தற்போது ஹரியாணாவில் உள்ள 90-ல் அறுபதுக்கும் அதிக மான சட்டசபை தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் என பாஜக எதிர்பார்த்துள்ளது.

ஹரியாணாவில் தொடர்ந்து இரண்டாவது முறையாக காங்கிரஸுக்கு எதிரான அதிருப்தி, தங்களுக்கான வாக்குகளாக மாறும் என பாஜக நம்புகிறது.

எனினும், மக்களவைத் தேர்த லுக்கு பின் நடந்த பல மாநிலங் களின் இடைத்தேர்தல்களில் ‘மோடி அலை’ வீசாமல், பாஜகவுக்கு குறைந்த தொகுதி களில் மட்டும் வெற்றி கிடைத்தது நினைவு கூரத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in