Last Updated : 03 Mar, 2019 04:38 PM

 

Published : 03 Mar 2019 04:38 PM
Last Updated : 03 Mar 2019 04:38 PM

விமானப் படையில் ரஃபேல் போர் விமானத்தைச் சேர்ப்பதில் தாமதம் ஏற்பட மோடியே காரணம்: காங்கிரஸ் பதிலடி

இந்திய விமானப் படையில் ரஃபேல் போர் விமானத்தைச் சேர்ப்பதில் தாமதம் ஏற்பட பிரதமர் மோடியே காரணம். பாகிஸ்தான் தாக்குதல் குறித்து அவர் தனக்குத்தானே கேள்வி கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது.

புல்வாமா தீவிரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய விமானப்படை, பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டுத் திரும்பியது.

அந்தத் தாக்குதல் குறித்து நேற்று பேசிய பிரதமர் மோடி, " ரஃபேல் போர் விமானம் இப்போது இருந்திருந்தால், பாகிஸ்தானின் நிலைமை வேறுமாதிரி இருந்திருக்கும். ஆனால், தாக்குதல் குறித்து எதிர்க்கட்சிகள் ஆதாரம் கேட்கிறார்கள்" எனத் குற்றம் சாட்டியிருந்தார்.

இதற்கு ட்விட்டரில் பதில் அளித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "ரஃபேல் போர் விமானம் இந்தியா வரத் தாமதம் ஆனதற்குக் காரணமே மோடிதான். அவர்தான் முழு பொறுப்பு. பிரதமர் மோடிக்கு வெட்கம் இல்லையா. ரூ.30 ஆயிரம் கோடியை திருடி,  அனில் அம்பானிக்குக் கொடுத்துள்ளார்.. ரஃபேல் விமானம் இருந்திருந்தால், துணிச்சல் மிக்க வீரர் அபிநந்தன் ஏன் பழமையான மிக் ரக விமானத்தை இயக்கப் போகிறார்" என கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் மணிஷ் திவாரி இன்று டெல்லியில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

 "பாகிஸ்தானில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல் குறித்து பிரதமர் மோடி தனக்குத் தானே கேள்வி எழுப்பிக் கொள்ள வேண்டும். காங்கிரஸ் கட்சி இதற்கு முன்பும் விமானத் தாக்குதல் குறித்து  ஆதாரங்களைக் கேட்கவில்லை. இப்போதும் கேட்கவில்லை.

ரஃபேல் போர் விமானம் இருந்திருந்தால், பாகிஸ்தான் மீதான தாக்குதல் வேறு மாதிரி இருந்திருக்கும் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார். அதற்கு என்ன அர்த்தம். ரஃபேல் போர் விமானம் இருந்திருந்தால், என்ன மாதிரியான விளைவுகள் நடந்திருக்கும் என்பதை பிரதமர் மோடி விளக்க வேண்டும்.

இந்திய விமானப்படையில் ரஃபேல் போர் விமானத்தைச் சேர்ப்பதில் தாமதம் நிகழ முக்கியக் காரணம் மோடிதான். ஏனென்றால் முந்தைய காங்கிரஸ் செய்த ஒப்பந்தத்தை அவர்தான் ரத்து செய்தார்''.

இவ்வாறு மணிஷ் திவார் பேசினார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x