Published : 30 Mar 2019 01:05 PM
Last Updated : 30 Mar 2019 01:05 PM

நியு ஜெர்ஸி மருத்துவமனை வளாகத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த கர்நாடகாவைச் சேர்ந்த டாக்டர்: பெற்றோர் அதிர்ச்சி

கர்நாடக மாநிலம் ரெய்ச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த நந்திகம் மணிதீப் என்ற 28 வயது மருத்துவர் அமெரிக்காவில் உள்ள நியு ஜெர்ஸியில் மருத்துவமனை வளாகத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

இவரது மரணம் குறித்து இந்தியாவில் உள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

காந்திநகர் சிந்தனூர் தாலுக்காவைச் சேர்ந்த வேளாண் குடும்பத்தைச் சேர்ந்தவர் நந்திகம் நவ்தீப், இவரது திடீர் மரணம் குறித்த காரணம் இதுவரை வெளியாகவில்லை.

 

ஸ்ரீநிவாஸ், பத்மா என்ற இவரது பெற்றோர் அதிர்ச்சியிலிருந்து இன்னமும் மீளவில்லை, இது தொடர்பாக விசாரணை தேவை என்று இவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

 

மணிதீப் மணிப்பால் கஸ்தூரிபா மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் டிகிரி முடித்துள்ளார். 3 ஆண்டுகளுக்கு முன்பாக முதுகலை பட்டப்படிப்புக்காக நியுஜெர்ஸி சென்றார்.  செயிண்ட் பீட்டர்ஸ் பல்கலைக் கழக  மருத்துவமனையில் பணியாற்றி வந்தார்.

 

இவரது சகோதரர் ஷிவா நந்திகம் மென்பொருள் பொறியாளராக பெங்களூருவில் பணியாற்றி வருகிறார்.  இறந்த மணிதீப் மைசூருவின் ராமகிருஷ்ணா வித்யாசாலா மாணவராவார். இவர் என்.சி.சியிலும் இருந்துள்ளார்.

 

ரெய்ச்சூர் உதவி போலீஸ் ஆணையர், மரணத்திற்கான காரணம் விசாரணை முடிந்த பிறகே தெரியும் என்கிறார். இன்னொரு உயரதிகாரி டி. கிஷோர் பாபு குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்து கொண்டு அனைத்து உதவிகளையும் புரிந்து வருகிறார்.

 

சம்பிரதாயங்கள் முடிந்து மணிதீப் உடல் விரைவில் இந்தியா அனுப்பி வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x