Published : 30 Mar 2019 07:50 AM
Last Updated : 30 Mar 2019 07:50 AM

60 வயது விவசாயிகளுக்கு ரூ.5 ஆயிரம் உதவித்தொகை: ஜனசேனா கட்சி வாக்குறுதி

ஆந்திர மாநிலத்தின் கர்னூல், அனந்தபூர், கடப்பா ஆகிய மாவட்டங்களில் நடிகரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யான் நேற்று சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:

இந்த தேர்தலில் ஜனசேனா கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், கே.சி கெனால் மூலம் விவசாயத்துக்கு பெருமளவில் தண்ணீர் திறந்து விடப்படும். 60 வயது நிரம்பிய விவசாயிகளுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.

மேலும், ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் சாகுபடிக்கு நிதி உதவி செய்யப்படும். ராயலசீமா வறட்சி மாவட்டங்கள் என்பதால், ரூ. 50 ஆயிரம் கோடி இதற்கென தனி நிதி ஒதுக்கப்படும்.

3 லட்சம் அரசு வேலைகள் நிரப்பப்படும். கல்லூரி மாணவ, மாணவியருக்கு இலவச லேப்-டாப் வழங்கப்படும். இவ்வாறு பவன் கல்யாண் பேசினார்.

தள்ளுமுள்ளுவில் வாலிபர் பலி

நடிகர் பவன் கல்யாண் நேற்று கர்னூல் மாவட்டம், நந்தியாலில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவரை காண ரசிகர்கள் அதிக அளவில் கூடினர். இதனால், அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதில், ஷிராஜ் (32) என்ற இளைஞர் படுகாயமடைந்தார். உடனடியாக இவர் நந்தியால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x