

ஒற்றை இருசக்கர வாகனத்தில் பயணித்த 5 பேர், ரோட்டைக் கடக்க முயன்றபோது, எதிரே வந்த டெம்போவால் மோதி தூக்கி எறியப்பட்டனர். இவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
முதுகுத் தண்டுவடத்தைச் சில்லிட வைக்கும் இந்த விபத்து தெலங்கானாவின் மஹ்பூப்நகரில் நடந்துள்ளது. இதுதொடர்பாக காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன.
இளம் வயதினர் ஐந்து பேர் ஒரே இரு சக்கர வாகனத்தில் சாலையில் சென்றுகொண்டிருக்கின்றனர். ஒருவர் வண்டியை ஓட்ட முன்னால் ஒருவரும் அவருக்குப் பின்னால் மூவரும் அமர்ந்திருக்கின்றனர். பின்னால் இருப்பவர், யாருக்கோ கைகாட்டிக் கொண்டே செல்கிறார். வண்டி ரோட்டைக் கடக்க முயற்சி செய்கிறது
அப்போது எதிர்ப்பக்கத்தில் சரக்குகளுடன் டெம்போ ஒன்று வருகிறது. எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் மீது டெம்போ மோத, அனைவரும் தூக்கி வீசப்படுகின்றனர்.
இதைப் பார்க்கும் பொதுமக்கள் உடனடியாக, காயமடைந்தவர்களுக்கு உதவ ஓடி வருகின்றனர். இந்தக் காட்சிகள் அனைத்தும் அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன. இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.