Last Updated : 10 Mar, 2019 08:12 PM

 

Published : 10 Mar 2019 08:12 PM
Last Updated : 10 Mar 2019 08:12 PM

தேர்தல் தேதி அறிவிக்கும் வரை பல ஆயிரம் கோடி ரூபாய் திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி

உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்தினம் வரையிலும் வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.32 ஆயிரம் கோடிகளில் நலத்திட்டங்களை மோடி தொடங்கிவைத்துள்ளார்.

இந்நேரம் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆனால், உத்தரப் பிரதேச மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி நேற்றுவரையிலும் கூட தனது வளர்ச்சித் திட்டங்களை தொடங்கும் பணிகளில் அவர் கவனம் செலுத்திவந்தார். வளர்ச்சித் திட்டங்களுக்கான இந்தத் தொடக்கவிழாக்களும் அடிக்கல் நாட்டப்படுவதும் பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்காளர்களை கவர்ந்திழுக்கும் பிரிதொரு நோக்கமாகவே கருதப்படுகிறது.

நாட்டில் எத்தனையோ மாநிலங்கள் இருக்க குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் மட்டும் அவரது கவனம் இந்த வாரம் குவிந்திருந்தது. அதற்குக் காரணம் அங்குதான் ஒரே மாநிலத்தில் 80 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. மத்திய அரசில் அரசாங்கம் அமைப்பதற்கான மிகப்பெரிய பங்குவகிக்கும் மாநிலமாக உத்தரப் பிரதேசம் திகழ்கிறது.

இத்தகைய நாட்டின் மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட மாநிலத்தின் அரசியல் முக்கியத்தும் கருதியே பிரதமர் மோடி அவர்கள் ரூ.102,708 கோடி திட்டங்களை தொடங்கிவைத்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் அவர் பலமுறை உபி சென்றுவந்துள்ளார். 2019ல் அதிகாரத்தில் மீண்டும் திரும்புவதற்காகவே 2014 போன்ற ஒரு காட்சியை உருவாக்க அவர் முயற்சிப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

2014 நாடாளுமன்ற தேர்தலில், உபியில் மட்டுமே 73 தொகுதிகளை வென்றது பாஜக.

கடந்த பிப்ரவரி 11 அன்று பிரதமர் மோடி தனது மதுராவில் அமைந்துள்ள பிருந்தாவனத்தை பார்வையிடச் சென்றபோது அங்கு, அக்ஷயா பாத்ரா அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், அக்ஷய பத்ரா நள்ளிரவு உணவு திட்டத்தின் கீழ் மோடி 3 பில்லியன் உணவு வழங்கலைத் தொடங்கிவைத்தார்.

பிப்.15ல், பந்தேல்கண்ட்டுக்கான குடிநீர் குழாய்த் திட்டம், பாதுகாப்பு வளர்ச்சித் திட்டம், பந்தேல்கண்ட் எக்ஸ்பிரஸ் சாலை மற்றும் பல்வேறு ரெயில்வே திட்டங்கள் உள்ளிட்டு, ரூ.20,506 கோடிகளில் பல்வேறு நலத் திட்டங்களை ஜான்ஸி நகரில் தொடங்கிவைத்தார்.

பிப்.19ல் 3,382 கோடிகளில் 47 நலத்திட்டங்களை மோடி தொடங்கிவைத்தார்.

பிப்.24ல் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் மக்களவைத் தொகுதியில் நாடு தழுவிய அளவிலான பிரதமரின் கிசான் சம்மன் நிதி என்ற திட்டத்தை கோரக்பூரில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இது தவிர, இதே மாவட்டத்திற்காக தனியாக ரூ.10 ஆயிரம் கோடிகளில் நலத்திட்டங்களைத் தொடங்கிவைத்தார்.

மார்ச் 8 அன்று மீண்டும் உபி வந்தபோது, அங்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் தொகுதியான அமேதி தொகுதியில் பொதுக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு ரூ.538 கோடிகளில் வளர்ச்சித்திட்டங்களை மோடி தொடங்கி வைத்தார்.

பிரதம மந்திரி மாவட்டத்திற்கு 10,000 கோடி ரூபாய் திட்டங்களை தனியாக தொடங்கினார்.

மார்ச் 8 ம் தேதி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மக்களவை தொகுதியில், அமேதியில் ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள மோடி மீண்டும் வந்திருந்தார்,

அதே நாளில் வாரணாசியில் தனது சொந்த நாடாளுமன்ற தொகுதியினை பார்வையிட்டு, காசி விஸ்வநாத தாம் பரி யோஜனா என்ற பெயரில் ரூபாய் 380 கோடி புதுப்பித்தல் மற்றும் புத்துயிர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

அதுமட்டுமின்றி, 1602.0.1989 கோடிகளில் 11 திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டியதும் இன்னுமொரு ஆறு திட்டங்கள் முழுமைபெறுவதற்காக ரூ.703,0,056 கோடிகளிலான திட்டங்களையும் அவர் தொடங்கிவைத்தார்.

நேற்று, பிரதமர் மோடி டெல்லி திரும்புவதற்கு முன், ரூ.32,513 கோடிகளில் காஸியாபாத்தில் 14 வளர்ச்சித் திட்டங்களை தொடங்கிவைத்தார்.

நொய்டா நகரத்தில் நொய்டா நகர மையத்தை நோய்டா எலக்ட்ரானிக் நகரரோடு இணைக்கும் மெட்ரோ ரயிலுக்கான புதிய திட்டம் உள்ளிட்ட 11 நலத் திட்டங்களையும் மோடி தொடங்கிவைத்தார்.

அதேநாளில் 1,320 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் குர்ஜா அனல் மின் நிலைய திட்டத்தை ரூ.12 ஆயிரம் கோடிகளில் அடிக்கல் நாட்டினார்.

அதேபோல, நொய்டாவில் உள்ள தொல்லியல் துறையின் பண்டிட் தீன்தயால் உபாத்தியயா தொல்லியல் ஆய்வு நிறுவனத்தை ரூ.289 கோடி முதலீட்டுடன் திறந்துவைத்தார்.

மாநிலத்தின் கிழக்கு பகுதியிலுள்ள தனது வாக்குத் தளத்தை பலப்படுததுவதற்காக மோடி முயல்கிறார் என்ற உண்மையை இந்த அடிக்கல் நாட்டலும் நலத்திட்ட தொடக்கவிழாக்களும் காட்டுகின்றன. இதன் தாக்கம் உபியோடு நின்றுவிடாது, இப்பிராந்தியத்தில் உபியின் 32 மக்களவைத் தொகுதிகளிலும் பீகாரில் உள்ள பல இடங்களிலும் வாக்குப்பதிவில் இதற்கான தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

இதற்கு மற்றொரு காரணம் உண்டு. உபியில் வலுவான முன்னிலையில் இருக்கும் சமாஜ்வாதி கட்சியின் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கின்றன.

இதுகுறித்து கருத்து தெரிவித்த மூத்த அரசியல் ஆய்வாளர் பிரேம்ஷங்கர் மிஸ்ரா கூறுகையில்,

''மோடி இம்மாநிலத்தில் அதிகப்பட்சம் வெற்றிபெறும் நோக்கத்தோடு பல இடங்களை வெல்ல முயற்சிசெய்து வருகிறார். உண்மையில், 2014 ஆம் ஆண்டில் அவரது செயல்திறன் வரலாற்று ரீதியாக இருந்தது. ஆனால் இந்த ஐந்து ஆண்டுகளில் சமன்பாடுகள் மாற்றப்பட்டுள்ளன. மேலும், அவர் தனது ஆட்சி செயல்திறன் குறித்து வாக்காளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.

ஆனால் தேசம், வளர்ச்சி கோஷங்கள்மூலம் வாக்குகளை சேகரிப்பதில்தான் அவரது முயற்சிகள் உள்ளன. புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் தேசியவாத பிரச்சினை சூடாகி உள்ளது என்பது உண்மைதான்.

அதேபோல வளர்ச்சி என்ற தன்னை பற்றி சித்திரத்தையும் மக்கள் மத்தியில் உருவாக்க இந்த தொடக்கவிழாக்களும் அடிக்கல் நாட்டலும் அவருக்கு கைகொடுக்க வாய்ப்புள்ளது.

பிரதமர் அலுவலகத்திற்கு செல்லும் வழி உபி என்பது மோடி தெரிந்துவைத்துள்ளார்.''

இவ்வாறு அரசியல் விமர்சகர் பிரேம்ஷங்கர் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

தமிழில்: பால்நிலவன்

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x