காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த 2 நாட்களில் தேர்தலில் போட்டியிட நடிகை ஊர்மிளாவுக்கு வாய்ப்பு

காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த 2 நாட்களில் தேர்தலில் போட்டியிட நடிகை ஊர்மிளாவுக்கு வாய்ப்பு
Updated on
1 min read

காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த இரு நாட்களில் பாலிவுட் நடிகை ஊர்மிளா மட்டோன்ட்கருக்கு மும்பை வடக்கு மக்களவைத் தொகுதியில் போட்டியிட அந்தக் கட்சி வாய்ப்பு அளித்துள்ளது.

பிரபல பாலிவுட் நடிகை ஊர்மிளா மட்டோன்ட்கர் கடந்த இரு நாட்களுக்கு முன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து அக்கட்சியில் இணைந்தார்.

அப்போது ஊர்மிளா கூறுகையில், ''நான் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் மீது நம்பிக்கை கொண்டவள். எனவேதான் இக்கட்சியில் இணைந்துள்ளேன். தேர்தலுக்காக அல்ல. தீவிர அரசியலில் முதல் அடியை எடுத்து வைத்துள்ளேன்.

மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சர்தார் படேல் ஆகியோரின் கொள்கைகள் அடிப்படையில் எனது அரசியல் கருத்துகளை வடிவமைத்த குடும்பத்தைச் சேர்ந்தவள் நான். நன்கு படித்த குடும்பத்தைச் சேர்ந்தவளாக இருப்பினும் திரைப்படத் துறையில் சேர்ந்தேன். என்றாலும் சிறுவயதில் இருந்தே நான்  சமூக விழிப்புணர்வு கொண்டவளாக இருந்தேன்'' என்றார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்ட அறிவிப்பில், "மும்பையின் வடக்கு மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை பாலிவுட் நடிகை ஊர்மிளா மட்டோன்ட்கருக்கு வழங்கி காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு முடிவு செய்துள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in