Published : 04 Mar 2019 16:45 pm

Updated : 04 Mar 2019 16:46 pm

 

Published : 04 Mar 2019 04:45 PM
Last Updated : 04 Mar 2019 04:46 PM

மீண்டும் பொய் சொல்வதா? மோடி மீது ராகுல் காந்தி தாக்கு; ஸ்மிருதி இரானி பதிலடி

உத்தரப் பிரதேசம், அமேதி தொகுதியில் துப்பாக்கித் தொழிற்ச்சாலைக்கு அடிக்கல் நாட்டி வைத்து பிரதமர் மோடி மீண்டும் பொய் சொல்லி இருக்கிறார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

ராகுல் காந்திக்குப் பதிலடி தரும் வகையில், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, அமேதி தொகுதியில் வளர்ச்சி வந்துவிடும் என்று ராகுல் அஞ்சுகிறார் என்று விமர்சித்துள்ளார்.


ராகுல் காந்தியின் மக்களவைத் தொகுதியான அமேதியில் ரஷ்ய நிறுவனத்துடன் இணைந்து துப்பாக்கித் தொழிற்சாலை தொடங்குவதற்குப் பிரதமர் மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். ரஷ்ய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஏ.கே-203 ரக தானியங்கி துப்பாக்கிகள் தயாரிக்கப்பட உள்ளன.

அப்போது பேசிய மோடி, "எந்தவிதமான ஆயுதங்களைத் தயாரிக்க வேண்டும் என்று முந்தைய அரசுக்குத் தெரியவில்லை. மக்களவைத் தேர்தல் நெருங்கும் வரை 2013-ம் ஆண்டுவரை கட்டிடங்கள் கூட கட்டப்படவில்லை" என முந்தைய காங்கிரஸ் அரசை விமர்சித்திருந்தார்.

பிரதமர் மோடியின் பேச்சுக்கு பதில் அளிக்கும் வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், "பிரதமர்... கடந்த 2010-ம் ஆண்டு அமேதியில் துப்பாக்கித் தொழிற்சாலை அமைக்க நான்தான் அடிக்கல் நாட்டினேன். அந்த தொழிற்சாலையில் சிறிய ரக துப்பாக்கிகள் மட்டும் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

அமேதிக்கு நேற்று சென்று பொய் பேசி இருக்கிறீர்கள், இதைத்தான் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்கள். சிறிதுகூட நீங்கள் வெட்கப்படவில்லையா" என ராகுல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியை விமர்சித்து ராகுல் காந்தி ட்வீட் செய்ததற்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பதிலடி கொடுத்து ட்வீட் செய்துள்ளார்.

ஸ்மிருதி இரானி ட்விட்டரில் கூறுகையில், "அமேதி தொகுதியில் வளர்ச்சி ஏற்படுவதைக் கண்டு அச்சப்படுகிறீர்கள். கோர்வாவில் என்ன தொடங்கிவைக்கப்பட்டது என்று நீங்கள் சென்று பார்க்கவில்லை. இந்தியா, ரஷ்யா ஒப்பந்தத்தின்படி ஏக.203 ரக துப்பாக்கிகள் தயாரிக்கப்படுகின்றன" எனத் தெரிவித்தார்.

 

தவறவிடாதீர்!



    அமேதி தொகுதிபிரதமர் மோடிதுப்பாக்கி தொழிற்சாலைஸ்மிருதி இரானிராகுல் காந்தி

    Sign up to receive our newsletter in your inbox every day!

    More From This Category

    More From this Author

    x