13 நாட்களுக்குப் பிறகு ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை திறப்பு

13 நாட்களுக்குப் பிறகு ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை திறப்பு
Updated on
1 min read

கனமழை, வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், 13 நாட்களுக்குப் பிறகு ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை திறக்கப்பட்டுள்ளது.

இந்த நெடுஞ்சாலை மூடியிருந்ததால் மாநிலத்தின் பிற பகுதிகளில் வாழும் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை கொண்டு சேர்ப்பதில் சிக்கல்கள் நிலவின.

இந்நிலையில், ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை திறக்கப்பட்டுள்ளது, வடக்கு மற்றும் தெற்கு காஷ்மீரில் வாழும் மக்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.

எல்லையோர சாலை அமைப்புக்குழு ராணுவ பொறியாளர்களுடன் இணைந்து ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியை போக்குவரத்துக்கு ஏதுவாக சீரமைத்துள்ளனர். இதனை ராணுவ செய்தித் தொடர்பாளர் உறுதி செய்துள்ளார்.

சுமார் 3000 முதல் 6000 வாகனங்கள் பெரும்பாலும் டிரக்குகள் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லக் காத்திருக்கின்றன. இருப்பினும், பாதுகாப்புக் காரணங்களுக்காக தற்போதைக்கு இலகு ரக வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.

இதேபோல், மாநிலத்தின் மற்ற சாலைகளையும் சீரமைக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in