ஒரே உருவமுள்ள இன்னொருவரைக் கொன்று தான் இறந்துவிட்டதாக நாடகமாடிய மும்பை குண்டு வெடிப்பு தீவிரவாதிக்கு ஆயுள் தண்டனை

ஒரே உருவமுள்ள இன்னொருவரைக் கொன்று தான் இறந்துவிட்டதாக நாடகமாடிய மும்பை குண்டு வெடிப்பு தீவிரவாதிக்கு ஆயுள் தண்டனை
Updated on
1 min read

ஒரே உருவமுள்ள இன்னொருவரைக் கொன்று தான் இறந்துவிட்டதாக நாடகமாடிய தீவிரவாதிக்கு மும்பை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இவர் குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கிய குற்றவாளி ஆவார்.

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கடாரி, அவரைப் போன்ற தோற்றம் கொண்ட உதிரி பாகங்கள் விற்பனையாளர் வஹாப் பங்கர்வாலா என்பவரைக் கொலை செய்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. 

தீவிரவாதி கடாரி, தன்னைப் போன்ற தோற்றம் கொண்ட உதிர பாகங்கள் விற்பனையாளரைக் கொன்ற இச்சம்பவம் மீரா சாலைப் பகுதியில் உள்ள ஒரு வாடகை பிளாட்டில் 2003 ஆகஸ்ட் 15 அன்று நடந்தது என்று அரசு வழக்கறிஞர் சஞ்சய் லோண்டே தெரிவித்தார்.

மாலேகானுக்கு தப்பிச் சென்றார்

தீவிரவாதி சையத் மஸ்டிக் வஹியுதின் கடாரி கொலை செய்த வஹாப்பின் தலையைத் துண்டித்து அதை விறார் பகுதியில் உள்ள சிற்றோடை ஒன்றில் எறிந்தார். மீதமுள்ள உடலை கடாரி எரித்துவிட்டார். இருவரின் தோற்றமும் ஒரே மாதிரி இருந்ததால் இறந்தது கடாரி என்று நம்பவைத்து போலீஸாரையும் வழக்கையும் திசை திருப்பினார்.

அதன் பின்னர், கடாரி மாலேகானுக்குத் தப்பிச் சென்றார். அங்கு தான் ஒரு மருத்துவரின் கிளினிக்கில் ஒரு கம்பவுண்டரைப் போல வேறொரு அடையாளம் மற்றும் வேலையை உருவாக்கிக் கொண்டார்.

நீண்டகாலம் மறைந்து வாழ்ந்த அவர் சமீபத்தில் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்படும்வரை இந்த ஆள்மாறாட்டத்தில் அவரது போலி அடையாளம் தொடர்ந்தது.

ஆயுள் தண்டனை

இந்நிலையில் இவ்வழக்கின் இறுதி விசாரணை நேற்று மும்பையை அடுத்த தானே நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இவ்வழக்கை விசாரித்த தானே மாவட்ட நீதிபதி எச் எம்.பட்வர்தன், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சையத் மஸ்டிக் வஹியுதின் கடாரி (எனும்) இமாம் அபு மன்சூர் ஹசானி (61) என்பவர் மீதான குற்றச்சாட்டு தக்க சாட்சிகளுடன் நிரூபணம் ஆகியுள்ளதாகத் தெரிவித்தார். மேலும் கடாரிக்கு ஆயுள் தண்டனையும் 5,000 ரூபாய் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in