Last Updated : 01 Mar, 2019 04:46 PM

 

Published : 01 Mar 2019 04:46 PM
Last Updated : 01 Mar 2019 04:46 PM

விமானிக்கு இறுதிச் சடங்கில் ராணுவ மரியாதை: கேரள வெள்ள மீட்பில் சிறந்த பங்களிப்புக்காக பாராட்டப் பெற்றவர்

ஜம்மு காஷ்மீரின் புட்காம் பகுதியில், இந்திய விமானம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த விமானப்படை விங் கமாண்டர் ஸ்குவாட்ரோன்  லீடர் சித்தார்த் வஷிஸ்த்க்கு இன்று அரசு ராணுவ மரியாதையுடன் அவரது இறுதிச் சடங்கு நடைபெற்றது.

ஜம்மு காஷ்மீரில் கடந்த புதன் அன்று காலை ஸ்ரீநகர் விமான நிலையிலிருந்து எம்ஐ-17 ஹெலிகாப்டர் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. பட்காம் அருகே நடந்த இவ்விபத்தில் இந்திய விமானப் படையைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்.

அதேநாளில் இந்திய விமானங்களை பாகிஸ்தான் விமானப் படை சுட்டு வீழ்த்தியதாக அந்நாட்டு ராணுவத் தளபதி ஆசிஃப் கஃபூர் தெரிவித்துள்ளார். ஆனால் இத்தகவலை இந்தியா இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

பட்காம் அருகே விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஸ்குவாட்ரோன் விமானப்படை விங் கமாண்டர் ஸ்குவாட்ரோன்  லீடர் சித்தார்த் வஷிஸ்த்தின் உடல் அவரது சண்டிகர் மாநிலத்தில் உள்ள அவரது சொந்த ஊருக்கு கொண்டுசெல்லப்பட்டது.

உயிரிழந்த இந்திய விமானப்படை விமானியின் உடலுக்கு அவரது குடும்பத்தினர், நண்பர்கள், பணியில் உள்ள ஓய்வுபெற்ற பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு இறுதி மரியாதை செலுத்தினர்.

இறுதிச் சடங்கின்போது விமானப்படை வீரர்கள் வானில் துப்பாக்கியால் சுட்டும் தங்கள் ஆயுதங்களை தலைகீழாக.நிறுத்தியும் ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது.

மனைவியும் விமானி

உயிரிழந்த விமானியின் மனைவி ஆர்த்தி சிங்கும் ஸ்ரீநகரில் உள்ள விமானப்படையில் விங் கமாண்டர் ஸ்குவாட்ரோன் லீடாராக பணியாற்றி வருபவர். அவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு ஆண்குழந்தை உண்டு.

உயிரிழந்த விமானி சித்தார்த் வாஷிஸ்த் இந்திய பாதுகாப்புத்துறையில் நான்காவது தலைமுறையாக பணியாற்றி வந்தவர். இந்திய விமானப் படையில் 2010ல் பணியில் சேர்ந்த கடந்த ஆண்டு ஜூலையில்தான் ஹெலிகாப்டர் 154வது அலகுக்கு மாற்றப்பட்டார்.

கேரள வெள்ள மீட்புப் பணியில்...

சித்தார்த் கடந்த ஆண்டு கேரள வெள்ளத்தின் போது மீட்புப் பணியின்போது தனது சிறந்த பங்களிப்புக்காக கடந்த ஜனவரி 26ன்போது பாராட்டுச் சான்றிதழைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சித்தார்த்தின் இறுதிச் சடங்கில் வி.பி.சிங் பட்னோர் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டு தங்கள் இறுதிமரியாதையை செலுத்தினர்.

இன்னொரு ஐஏஎஃப் ஊழியருக்கும் ராணுவ மரியாதை

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இன்னொரு இந்திய விமானப் படை ஊழியர் கார்போரல் விக்ராந்த்தின் இறுதிச் சடங்குகள்  ஹரியானாவின் ஜஜ்ஜார் மாவட்டத்தில் முழு இராணுவ மரியாதையுடன் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x