Last Updated : 04 Mar, 2019 12:22 PM

 

Published : 04 Mar 2019 12:22 PM
Last Updated : 04 Mar 2019 12:22 PM

சிறுநீரைச் சேமியுங்கள் உரச் செலவை மிச்சப்படுத்துங்கள்: நிதின் கட்கரி யோசனை

தன்னுடைய பல ஆலோசனைகளை செயல்படுத்த யாரும் முன்வராவிட்டாலும் கூட, அசராமல் அடுத்த யோசனையை முன்வைத்திருக்கிறார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.

 

நாக்பூர் நகராட்சி சார்பில் இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கட்கரி, மனித சிறுநீரைச் சேமித்து உரமாக்கலாம் என்ற யோசனையை முன்வைத்தார்.

 

இதுதொடர்பாகப் பேசிய அவர், ''இது நடந்தால் இந்தியா உரத்தை இறக்குமதி செய்யவேண்டிய அவசியமே இருக்காது. இயற்கைக் கழிவுகளில் இருந்து எரிபொருட்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன.

 

சிறுநீரில் நைட்ரஜனும் அம்மோனியம் சல்பேட்டும் உள்ளது. இதன்மூலம் எரிபொருட்களைத்  தயாரிக முடியும். விமான நிலையங்களில் சிறுநீரைச் சேமிக்கச் சொல்லி இருக்கிறேன். விவசாயத்துக்காக நாம் யூரியாவை இறக்குமதி செய்கிறோம். ஆனால் ஒட்டுமொத்த நாடும் சிறுநீரைச் சேமிக்கும் பட்சத்தில், நாம் உரத்தை இறக்குமதி செய்யவேண்டிய தேவை இருக்காது'' என்றார் கட்கரி.

 

சில ஆண்டுகளுக்கு முன்னதாக, தன்னுடைய சிறுநீரைச் சேமித்த கட்கரி, அதை டெல்லியில் உள்ள வீட்டுத் தோட்டத்துக்கு உரமாகப் பயன்படுத்துவதாகவும் அதன்மூலம், உற்பத்தி 25% அதிகரித்ததாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x