Last Updated : 06 Mar, 2019 02:37 PM

 

Published : 06 Mar 2019 02:37 PM
Last Updated : 06 Mar 2019 02:37 PM

பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து ரஃபேல் ஒப்பந்த ஆவணங்கள் களவாடப்பட்டுள்ளன: உச்ச நீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல் தகவல்

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து களவாடப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் பரபரப்புக் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

 

“விசாரணையில் இருக்கும் ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் களவாடப்பட்டுள்ளன” என்று கே.கே.வேணுகோபால் தெரிவித்தார்.

 

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான விவகாரம் குறித்த சீராய்வு மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்ட அட்டர்னி ஜெனரல் அந்த ஆவணங்கள் கிளாசிபைடு ஆவணங்கள், ரகசிய ஆவணங்களாகும் ஆகவே அவற்றை வெளியிடுவது அதிகாரபூர்வ ரகசிய சட்டத்தை மீறுவதாகும்.

 

“ஆகவே அந்த ரகசிய ஆவணங்களை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடுபவர்கள் அதிகாரபூர்வ ரகசிய சட்டத்தின் கீழ் குற்றம் செய்தவர்கள் ஆவார்கள், மேலும் நீதிமன்ற அவமதிப்பும் இதில் அடங்கும்” என்று அட்டர்னி ஜெனரல் தெரிவித்தார்.

 

புதன் கிழமையான இன்று தி இந்து (ஆங்கிலம்) நாளிதழ் வெளியிட்டுள்ள ரஃபேல் ஒப்பந்தம் பற்றிய கட்டுரை உச்ச நீதிமன்ற விசாரணையின் மீது செல்வாக்கு செலுத்துவதாகும் அதுவே நீதிமன்ற அவமதிப்புக்குரியதாகும் என்று அட்டர்னி ஜெனரல் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x