Published : 07 Mar 2019 11:13 AM
Last Updated : 07 Mar 2019 11:13 AM

தொழில்நுட்பக் குழுமமா, ஊடகமா, மார்க்கெட்டிங் நிறுவனமா? நீங்கள் யார்? - ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களிடம் நாடாளுமன்றக் குழு கேள்வி

ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் ஆகியவற்றின் பக்கங்களைத் தவறான முறையில் துஷ்பிரயோகம் செய்யாமல் இருப்பத உறுதி செய்யுமாறு தகவல் மற்றும் தொழில்நுட்பத்திறகான நாடாளுமன்றக் குழு அறிவுறுத்தியுள்ளது.

 

அதாவது சமூக ஊடகங்கள் தேர்தல் சமயங்களில் வன்முறையைத் தூண்டும் விதமான உள்ளடக்கங்கள் குறித்து எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று நாடாளுமன்றக் குழுவினால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

சமூகவலைத்தள நிறுவனங்களுடன் நாடாளுமன்ற ஐடி குழு 3வது முறையாக பேச்சு வார்த்தை நடத்துகிறது. கடைசியாக ட்விட்டர் அதிகாரிகளுடன் பேசியது.

 

செய்திகள் போல்... போலிச்செய்திகள்:

 

இந்தக் கூட்டம் தொடர்பாக தி இந்து ஆங்கிலம் இதழுக்கு பகிர்ந்து கொண்ட நாடாளுமன்றக் குழு சேர்மன் அனுராத் தாக்குர், “ஆக்கப்பூர்வமான கூட்டத்தை நடத்தினோம். சமூக ஊடகங்களை இந்தியாவில் கோடிக்கணக்கான பேர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த எழுத்து மேடைகளை வெறுப்புப் பிரச்சாரத்துக்கும், போலிச்செய்திகள் சொடுக்குவோரிடமிருந்தும் காக்க வேண்டும். தேர்தலின் போது அயல்நாட்டு தலையீடு இருக்கக் கூடாது என்பதை உறுதி செய்யுமாறு வலியுறுத்தினோம், பேஸ்புக்கும் தேர்தல் ஆணையத்துடன் சீரான சந்திப்பில் இருப்போம் என்று உறுதி அளித்துள்ளனர் என்றார்.

 

முகநூல் அதிகாரிகளை நாடாளுமன்ற ஐடி குழு குடைந்து எடுத்ததாக சில வட்டாரங்கள் தெரிவித்தன.

 

குறிப்பாக, “ஃபேஸ்புக் தொழில்நுட்ப வகை விளம்பர நிறுவனமா? ஊடக நிறுவனமா?, அல்லது மார்க்கெட்டிங் நிறுவனமா? எந்த வகை நிறுவனம் என்று நாடாளுமன்றக் குழு கேட்டதற்கு அவர்களிடமிருந்து எங்களுக்கு தெளிவனா பதில் கிடைக்கவில்லை. அவர்கள் ‘கலவையான நிறுவனம்’ என்று சிலர் கூறுகின்றனர்” என்று குழு உறுப்பினர் ஒருவர் தி இந்து ஆங்கிலம் நாளிதழுக்குத் தெரிவித்தார்.

 

 

அதே போல் குளோன் செய்யப்பட்ட கணக்குகள் அதாவது போலிக் கணக்குகள் குறித்த விவகாரமும் சமூக ஊடகங்களிடம் எழுப்பப்பட்டது. தன்னுடைய பெயரில் ஏகப்பட்ட கணக்குகள் இருப்பதால் தன் கணக்கு எதுவென்றே தெரியவில்லை என்று குழுவின் உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

 

அதே போல் ஃபேஸ்புக்கில் வெளியாகும் எழுத்துக்கள், அல்லது உள்ளடக்கங்களை, அல்லது விளம்பர மற்றும் இந்திய மார்க்கெட்டிங் ஆகியவற்றை  ஒழுங்கு முறைப்படுத்தும், கட்டுப்படுத்தும் சட்டகங்கள் என்ன என்று கேள்வியை நாடாளுமன்ற குழு அவர்களிடத்தில் கேட்டது.

 

இந்தச் சந்திப்பில், குளோபல் பப்ளிக் பாலிசி துணைத்தலைவர் ஜோயெல் கப்ளான், பேஸ்புக் இந்தியாவின் துணைத்தலைவர் அஜித் மோகன்,  இந்திய பப்ளிக் பாலிசி மற்றும் புரோகிராம் இயக்குநர் அங்கி தாஸ் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x