Published : 22 Sep 2014 12:30 PM
Last Updated : 22 Sep 2014 12:30 PM

சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா மீதான வழக்கு: நீதிமன்றத்துக்கு அரசு வழக்கறிஞர் உதவ உத்தரவு - 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை சந்தித்த விவகாரம்

சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா, 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை சந்தித்த விவகாரத்தில் நீதிமன்றத்துக்கு உதவுமாறு அரசு சிறப்பு வழக்கறிஞரை உச்ச நீதி மன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா, 2ஜி வழக்கில் தொடர்புடை யவர்களை அவரது வீட்டில் சந்தித்த தாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டில், அவரது வீட்டு வரவேற்பறை டைரியை கொடுத்தவர் பெயரை தெரிவிக்குமாறு மனுதாரருக்கு உச்ச நீதிமன்றம் உத்தர விட்டிருந்தது.

வாபஸ் பெற வேண்டும்

இந்த வழக்கு நீதிபதிகள் எச்.எல்.தத்து, எஸ்.ஏ.பாப்தே அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறி ஞர் துஷ்யந்த் தவே, “சிபிஐ இயக்குநர் வீட்டு டைரியை அளித்த வர் பெயரை வெளியிட முடியாத தற்கு நீதிமன்றத்திடம் மன்னிப்பு கோருகிறோம்.

அதற்கான கார ணத்தை தெரிவித்துள்ளோம். நீதி மன்றம் இதுகுறித்து பிறப்பித்த உத் தரவை வாபஸ் பெற வேண்டும்.

இந்த வழக்கில் அந்த ஆவணத்தை கொடுத்தவர் யார் என்பது முக்கியமல்ல. குற்றம் சாட்டப்பட்டவர்களை சிபிஐ இயக்குநர் சந்தித்ததால் வழக்கில் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதுதான் முக்கியம். அதை நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வர வேண்டும் என்பது தான் எங்கள் எண்ணம்” என்று வாதிட்டார்.

சிபிஐ இயக்குநர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், “நீதிமன்றத்தின் உத்தரவை வாபஸ் பெறும்படி கூறுவதை கடுமையாக எதிர்க்கி றேன். இந்த வழக்கை விசார ணைக்கு ஏற்கக் கூடாது. சிபிஐ இயக்குநருக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று வாதிட்டார்.

அவரது வாதத்தை நிராகரித்த நீதிபதிகள், “இந்த நீதிமன்றம் ஒரு தீர்ப்பை அளித்துள்ளது. அதை வாபஸ் பெறும்படி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ரகசிய ஆவணத்தை கொடுத்தவரின் பெயரை வெளியிடுவது அவரது உயிருக்கே ஆபத்தாக முடியும் என்று அதற்குக் காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நீதிமன்றம் அளித்துள்ள ஒரு தீர்ப்பை வாபஸ் பெறுவது என்றால், அது தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை பாதிக்கும். எதிர்காலத்திலும் இந்த உத்தரவைப் பின்பற்றி வழக்குகள் தொடர வாய்ப்புள்ளது.

எனவே, இந்த விஷயத்தில் தீர்ப் பளிக்கும் முன்பு, 2ஜி அலைக் கற்றை வழக்கில் நியமிக்கப் பட்டுள்ள அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆனந்த் குரோவரின் கருத்தையும் கேட்க நீதிமன்றம் விரும்புகிறது. இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை அவருக்கு ஒப்படைக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

இந்த வழக்கின் அடுத்த விசா ரணையை அக்டோபர் 10-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x