ராஜஸ்தானில் விழுந்து நொறுங்கிய மிக் 21 விமானம்; அபிநந்தன் பயன்படுத்திய வகையைச் சேர்ந்தது

ராஜஸ்தானில் விழுந்து நொறுங்கிய மிக் 21 விமானம்; அபிநந்தன் பயன்படுத்திய வகையைச் சேர்ந்தது
Updated on
1 min read

வழக்கமான பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய விமானப் படையின் மிக் 21 ரக விமானம், இன்று (வெள்ளிக்கிழமை) விபத்துக்குள்ளானது.

ராஜஸ்தானின் பிகானர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

ராஜஸ்தானின் நால் பகுதியில் இருந்து பிகானர் பகுதிக்கு அருகே விமானம் பறக்கும்போது நொறுங்கி விழுந்துள்ளது. விமானத்தை ஓட்டிய விமானி, பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பினார். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பறவை மோதியதால் விபத்து ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் கட்டுப்பாட்டை இழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கடந்த பிப்ரவரி 27-ம் தேதி தமிழக விமானி அபிநந்தன், தன்னுடைய மிக் 21 ரக விமானத்தின் மூலம் பாகிஸ்தானின் எஃப்-16 வகை விமானத்தை சுட்டு வீழ்த்தினார். அப்போதுதான் பொதுமக்களிடையே இவ்வகை விமானம் பரிச்சயமானது.

இந்த ரக விமானங்கள் விபத்துக்குள்ளாகி இதுவரை இருநூறுக்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகி உள்ளன.

இந்த வகை போர்விமானம், பயிற்சியின் போது சிலசமயம் விபத்துக்குள்ளாகி விடுகிறது. இதன் காரணமாக மிக் விமானத்தை ராணுவத்தினர் ‘பறக்கும் சவப்பெட்டி’ எனவும், ‘விதவை தயாரிப்பாளர்’ என்றும் பெயரிட்டு அழைப்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in