Last Updated : 11 Mar, 2019 06:23 PM

 

Published : 11 Mar 2019 06:23 PM
Last Updated : 11 Mar 2019 06:23 PM

பணமதிப்பு நீக்கம் பொருளாதார வளர்ச்சியில் எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தும்: முன் கூட்டியே ஆர்பிஐ எச்சரித்ததாகத் தகவல்

ரிசர்வ் வங்கி போர்டில் தற்போதைய கவர்னர் சக்திகாந்த தாஸ் உட்பட பலரும் அப்போதும் இருந்தனர். பணமதிப்பு நீக்கம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் எதிர்மறைத் தாக்கங்களை ஏற்படுத்தும், இதுவரை இல்லாத இந்த முடிவினால் கருப்புப் பண அச்சுறுத்தல் மீது எந்த ஒரு பொருண்மையான தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று ஆர்பிஐ போர்டு பணமதிப்பு நீக்கத்துக்கு முன்னர் எச்சரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இது தகவலுரிமைச் சட்டத்தின் கீழ் வைக்கப்பட்ட கோரிக்கையின் பேரில் அந்தக் கூட்டத்தின் நடவடைக்கைக் குறிப்புகள் பெறப்பட்டது. அதில் ஆர்பிஐ போர்டு பணமதிப்பு நீக்க அறிவிப்பை பிரதமர் மோடி அறிவித்த நவம்பர் 8, 2016 அன்று இரண்டரை மணி நேரத்துக்கு முன்புதான் கூடி விவாதித்தது என்று தெரிந்தது.

 

பணமதிப்பு நீக்கத்துக்குப் பிரதான காரணமாக கருப்புப் பண அச்சுறுத்தலே கூறப்பட்டது.  பணப்புழக்கத்திலிருந்து 86%  தாக்கம் செலுத்திய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என்ற அதிர்ச்சி அறிவிப்புக்குக் காரணம் கருப்புப் பணம் என்று கூறப்பட்டதாக கூட்டத்தின் நடவடிக்கைக் குறிப்புகள் கூறுகின்றன.

 

இந்த முக்கிய முடிவெடுக்கும் கூட்டம் அரசின் பணமதிப்பிழப்பு கோரிக்கைக்கு அனுமதி அளித்தது, இதில் கவர்னர் உர்ஜித் படேல், அப்போதைய பொருளாதார விவகார செயலர் சக்திகாந்த தாச் ஆகியோரும் உடனிருந்ததை கூட்ட நடவடிக்கைக் குறிப்புகள் தெரிவிக்கிறது. இந்தக் கூட்டத்தில் இருந்த மற்ற அதிகாரிகள் விவாரம்:

 

அப்போதைய் நிதிச்சேவை செயலர் அஞ்சுலி சிப் தக்கல், ஆர்பிஐ உதவி இயக்குநர்கள் ஆர்.காந்தி, எஸ்.எஸ்.முந்த்ரா. இந்த இருவரும் இப்போது போர்டில் இல்லை. ஆர்பிஐ கவர்னராக சக்திகாந்த தாஸ் டிசம்பர் 2018-ல் நியமிக்கப்பட்டார்.

 

“இது பாராட்டத்தக்க நடவடிக்கை, ஆனால் பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஆண்டின் ஜிடிபி வளர்ச்சியில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று கூறியிருப்பதாக இந்த ஆர்டிஐ தகவலைப் பெற்ற ஆர்டிஐ சமூகச் செயல்பாட்டாளர் வெங்கடேஷ் நாயக் என்பவர் காமன்வெல்த் மனித உரிமைகள் முயற்சி அமைப்பின் இணையதள போஸ்ட்டில் பதிவிட்டுள்ளார்.

 

“கருப்புப் பணத்தின் பெரும்பகுதி ரொக்கமாக இருப்பதல்ல, அது பெரும்பாலும் ரியல் எஸ்டேட் சொத்துக்களாக, தங்கமாக இருப்பதே ,ஆகவே கருப்புப் பணத்தின் மீது இந்த பணமதிப்பு நீக்க நடவடிக்கை எந்தவிதமான பொருண்மையான தாக்கத்தையும் ஏற்படுத்தாது” என்று ஆர்பிஐ போர்டு தனது 561வது கூட்டத்தில் நோக்கியது.

 

இதேபோல்தான் கள்ள நொட்டு அச்சுறுத்தலையும் பணமதிப்பு நீக்கம் ஒழிக்கும் என்ற கருத்துக்கு, புழக்கத்தில் இருக்கும் ரொக்கத்தில் கள்ள நோட்டுகள் ரூ.400 கோடி.  இது சதவீதமாகக் குறிப்பிடத்தகுந்த அளவில் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இந்த ஆர்டிஐ தகவலில் கிடைத்த புதிய விஷயம் என்னவெனில் 6 மாதங்கள் விவாதம் நடந்துள்ளது என்பதே. அதாவது ஜூன் 2016 முதல் மத்திய அரசும் ஆர்பிஐ-யும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து விவாதித்து வந்துள்ளன.

 

முன்னாள் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் பிறகு அளித்த நேர்காணல்களில் பிப். 2016-ல் தன்னிடம் அரசு பணமதிப்பு நீக்கம் பற்றி கருத்துகளைக் கேட்டதாகத் தெரிவித்திருந்தார்.

 

பணமதிப்பு நீக்கத்திற்கான முதல் நியாயப்பாடு மத்திய நிதியமைச்சகத்திலிருந்து ஆர்பிஐக்கு அனுப்பப்பட்ட அறிவிக்கையில் உள்ளது. அதாவது 2011-12 மற்றும் 2015-16-ல் இந்தியப் பொருளாதாரம் 30% வளர்ந்து வந்துள்ள நிலையில் ரூ.500, ரூ.1000 நோட்டுகளின் வளர்ச்சி இன்னும் அதிகமாக இருந்தது அதாவது முறையே 36%, 109%  என்று மத்திய அரசு ஆர்பிஐக்கு பணமதிப்பிழப்பு நீக்கத்தின் நியாயப்பாட்டுக்கு காரணம் தெரிவித்தது. 

 

 

இதற்கு ஆர்பிஐ போர்டு தரப்பில் அளித்த பதில் நடவடிக்கைக் குறிப்புகளில் பதிவாகியுள்ளது, அது, “குறிப்பிடப்பட்ட பொருளாதார வளர்ச்சி விகிதம் உண்மையான விகிதமே, ஆனால் புழக்கத்தில் இருக்கும் பணத்தின் விகிதம் பெயரளவிலானதுதான். பணவீக்கத்துக்காக அட்ஜஸ்ட் செய்து விட்டால் இந்த வித்தியாசம் பெரிய வித்தியாசம் இல்லை, ஆகவே இந்த வாதம் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு போதுமான அளவு ஆதரவளிக்கவில்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

ஆர்பிஐ இயக்குநர்களில் சிலர் பணமதிப்பிழப்பு நீக்கம் குறித்து நியாயமான கவலைகள் கொண்டிருந்தனர் என்றால் ஏன் அதற்கு ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது  என்பதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம் ஒன்று, நிதி உள்ளடக்கத்தினை இது துரிதப்படுத்தும் என்பதாக இருக்கலாம், மக்களை விரைவில் டிஜிட்டல் வடிவங்களுக்குக் கொண்டு வர முடியும் என்று நம்பியிருக்கலாம்.

 

இரண்டாவது, ஆர்பிஐ இயக்குநர்களின் கவலைகள்  6 மாதங்களாக விவாதத்தில் இருந்து வருவதுதான் என்று உறுதி செய்யப்பட்டதாகத் தெரிகிறது. 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x