

இந்த ஆண்டு 112 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படும் என குடியரசு தினத்தையொட்டி அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பத்ம விருதுகள் வழங்கும் விழா இன்று டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறவுள்ளது.
விழாவில் மொத்தம் 56 பேருக்கு பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்படவுள்ளன.
மறைந்த நடிகர் காதர் கான், அகாலி தளம் கட்சித் தலைவர் சுக்தேவ் சிங், மறைந்த எழுத்தா ளர் குல்தீப் நய்யார், மகாராஷ்டிரா வைச் சேர்ந்த பாபாசாகேப் புரந்தரே, பிஹாரைச் சேர்ந்த ஹுக்கும்தேவ் நாராயண் தேவ், சிஸ்கோ சிஸ்டம்ஸ் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி ஜான் சேம்பர்ஸ், நாட்டியக் கலைஞரும், திரைப்பட இயக்குநருமான பிரபு தேவா உள்ளிட்டோருக்கு விருது கள் அறிவிக்கப்பட்டன,
விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கவுள்ளார். விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
விருதுப் பட்டியலில் எஞ்சியவர் களுக்கு மார்ச் 16-ம் தேதி நடைபெறும் விழாவில் விருதுகள் வழங்கப்படும் என குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.