

இந்தியா - சீனா இடையே விண்வெளி, ரயில்வே உள்ளிட்ட 12 துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
3 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங், டெல்லி ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையே ரயில்வே, விண்வெளி உள்ளிட்ட 12 துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பின்னர் செய்தியாளர்களை பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் கூட்டாக சந்தித்தனர்.
அப்போது, சீனாவுடனான உறவு மேலும் வலுப்பெற முக்கியத்துவம் தரப்படும் என பிரதமர் மோடி கூறினார்.