எல்லையில் பின்வாங்கிய சீன படைகள் மீண்டும் ஊடுருவல்

எல்லையில் பின்வாங்கிய சீன படைகள் மீண்டும் ஊடுருவல்
Updated on
1 min read

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் லடாக் அருகே சுமர் பகுதியில் ஊடுருவிய சீன படைகள் நேற்று 1.5 கி.மீட்டர் தொலைவுக்கு பின்வாங்கின. சிறிது நேரத்தில் 35 சீன வீரர்கள் மீண்டும் இந்திய பகுதியில் ஊடுருவி மலை முகட்டில் முகாமிட்டுள்ளனர்.

சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வில் சுற்றுப் பயணம் மேற்கொண்டி ருந்த நேரத்தில் சுமார் 1000 சீன வீரர்கள் சுமர் பகுதியில் அத்துமீறி நுழைந்தனர். அந்தப் பகுதிக்கு இந்திய ராணுவத்தின் சார்பில் சுமார் 1500 வீரர்கள் அனுப்பப்பட்டனர். இதனால் பதற்றமான சூழ்நிலை எழுந்தது.

இந்தப் பிரச்சினை குறித்து அதிபர் ஜி ஜின்பிங்கிடம் பிரதமர் நரேந்திர மோடி கடும் ஆட்சேபம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து நேற்று முதல் சீன படைகள் பின்வாங்கத் தொடங்கின.

சுமார் 1.5 கி.மீட்டர் தொலைவுக்கு சீன படைகள் வாபஸ் பெறப்பட்டன. சில மணி நேரங்களில் 35 சீன வீரர்கள் மீண்டும் இந்திய பகுதியில் நுழைந்து அங்குள்ள மலைமுகட்டில் அமர்ந்துள்ளனர்.

இதேபோல் காஷ்மீரின் லே மாவட்டம் டெம்சாக் பகுதியில் இரு வாரங்களுக்கு முன்பு சுமார் 500 மீட்டர் தொலைவுக்கு சீன ராணுவ வீரர்களும் அந்த நாட்டு மக்களும் ஊடுருவினர். காஷ்மீர் அரசு சார்பில் அங்கு தடுப்பணை கட்டப்படுவதற்கு எதிர்த்து தெரிவித்து அவர்கள் அங்கு கூடாரம் அமைத்து தங்கியுள்ளனர். இதனால் அப்பகுதியில் 12-வது நாளாக பதற்றம் தொடர்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in