காதலுக்கு பச்சைக்கொடி காட்டு ராசா! - செல்போன் டவர் ஏறி போராடி தன் விருப்பத்தைச் சாதித்த பெண்

காதலுக்கு பச்சைக்கொடி காட்டு ராசா! - செல்போன் டவர் ஏறி போராடி தன் விருப்பத்தைச் சாதித்த பெண்
Updated on
1 min read

காதலை நிராகரித்ததற்காக 23 வயதுப் பெண் செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய சம்பவம் தெலங்கானாவில் நேற்று நடந்தது.

இதுகுறித்து வாரங்கல் நகரத்தில் உள்ள காகதியா பல்கலைக்கழக காவல்நிலைய அதிகாரி ராகவேந்திர ராவ் தெரிவித்ததாவது:

வாரங்கலில் நேற்று மாலை திடீரென ஒரு இளம் பெண் மல்லிகா (23), தன் காதலுக்கு நீதி கேட்டு செல்போன் கோபுரத்தில் ஏறி தனது போராட்டத்தை நடத்தினார். மல்லிகா,  என். பாபு என்பவரை கடந்த ஒன்பது ஆண்டுகளாக காதலித்து வந்தார். காதல் தொடங்கிய காலத்திலேயே இருவரும் திருமணம் செய்துகொள்வது என்று முடிவு செய்துள்ளனர்.

ஆனால் கடந்த சில நாட்களாக மல்லிகாவை பாபு தவிர்த்து வந்துள்ளார். அவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணத்திற்காக நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

நேற்று மாலை அவரை சமாதானப்படுத்தி செல்போன் கோபுரத்திலிருந்து இறக்கி காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தோம்.

பாபுவின் பெற்றோரையும் காவல்நிலையத்திற்கு அழைத்துவந்தோம். நடந்தவற்றை அவர்களும் ஒப்புக்கொண்டனர்.

இந்நிலையில் மல்லிகாவை பாபுவுக்கு மணம் முடிப்பதற்காக அறிவுறுத்தினோம். அப்போது பாபுவும் அங்கிருந்தார். அவர்கள் ஒருவழியாக பாபுவை மல்லிகாவுக்கு திருமணம் செய்துகொடுக்க சம்மதித்தனர். பாபுவுக்கும் இதில் மகிழ்ச்சியே.

பின்னர் மல்லிகா அவரது வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

இவ்வாறு வாரங்கல் காவல்நிலைய அதிகாரி தெரிவித்தார்.

செல்போன் கோபுரம் ஏறி தனது காதலுக்காக போராடிய இளம்பெண்ணால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in