

ரசிகர்களுக்கு ஹோலி பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துள்ள பாலிவுட் கலைஞர்கள் வண்ணங்களின் விழாவை மகிழ்ச்சியோடும் பாதுகாப்போடும் கொண்டாடுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
பாலிவுட் கலைஞர்களின் வாழ்த்துரைகள் வருமாறு:
அக்ஷய் குமார்: இந்த ஹோலி உங்கள் வாழ்க்கையில் மேலும் வண்ணங்களை சேர்க்கலாம். உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான ஹோலி மற்றும் நவ்ரோஸ் முபாரக் வாழ்த்துக்கள்.
ஹிர்த்திக் ரோஷன்: ஹோலியின் புனிதமும் வண்ணங்களும் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி, அமைதி, அன்பு ஆகியவற்றை நிரப்பட்டும். சந்தோஷமான ஹோலி.... அழகான மக்கள்....
மாதுரி தீக்ஷித்: இந்த ஹோலி ஒவ்வொருவரின் வாழ்விலும் வண்ணத்தைத் தீட்டட்டும். பாதுகாப்பாக இருங்கள், பொறுப்புடன் கொண்டாடுங்கள்!
ஹேமமாலினி: அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான ஹோலி வாழ்த்துக்கள்....
எம்ரான் ஹஸ்மி: ஒவ்வொருவருக்கும் மிகவும் மகிழ்ச்சியும் வண்ணமுமான ஹோலி வாழ்த்துக்கள்! மற்றும் பார்ஸிய தோழமைகள் அனைவருக்கும் நவ்ரோஸ் முபாரக் வாழ்த்துக்கள்....
மதுர் பண்டார்க்கர்: நம் வாழ்வு என்னும் கேன்வாஸில் மகிழ்ச்சி, செல்வம் மற்றும் அமைதி வண்ணங்களை கடவுள் தீட்டட்டும். அனைவருக்கும் மகிழ்ச்சியான ஹோலி.
அமித் சாத்: ஒவ்வொருவருக்கும் ஹேப்பி ஹோலி. நம் வாழ்விலிருந்து இந்த புன்னகைகளும் வண்ணங்களும் என்றென்றும் மங்காமல் இருக்கட்டும்.
ஈஷா தியோல்: ஹேப்பி ஹோலி!
அர்பாஸ் கான்: அனைவருக்கும் ஹேப்பி ஹோலி! வண்ணத் திருவிழாவை கொண்டாடுவோம். அன்பும் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் பரவட்டும்.
ஈஷா குப்தா: ஹேப்பி ஹோலி.
ரோணித் போஸ் ராய்: ஹேப்பி ஹோலி. அனைவருக்கும் ஏராளமான அன்பும் கடவுளின் ஆசிர்வாதமும் பெருகட்டும்.
தாஹிர் ராஜ் பாஸின்: இன்று ஒரு மிகச்சிறந்த நாள்! ஹேப்பி ஹோலி!
மல்லிகா ஷெராவத்: என்னுடைய அன்புநெஞ்சங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான ஹோலி வாழ்த்துக்கள்...