Published : 04 Sep 2014 10:34 AM
Last Updated : 04 Sep 2014 10:34 AM

புதிய தலைநகரை வாக்கெடுப்பு விவாதம் நடத்தி அறிவிக்க வேண்டும்: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வலியுறுத்தல்

புதிய ஆந்திர மாநில தலைநகர் குறித்து சட்டசபையில் வாக் கெடுப்பு நடத்தி, விவாதம் நடத்திய பின்னரே அறிவிக்க வேண்டும் என ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியதால் புதன்கிழமை ஆந்திர சட்டசபையில் அமளி ஏற்பட்டது.

புதிய தலைநகரம் தொடர்பாக அமைக்கப்பட்ட சிவராம கிருஷ் ணன் குழு அளித்த அறிக்கை குறித்து அமைச்சரவை ஆலோ சனை நடத்தி ஒரு முடிவுக்கு வந்துள்ளது. மாநிலத்தின் மையப் பகுதியில் தலைநகரம் அமைப்பதன் மூலம் அனைத்து மாவட்ட மக்களுக்கும் பயன் கிடைக்கும் என அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் விஜயவாடா-குண்டூர் இடையே புதிய தலைநகரம் அமைவது ஏறக்குறைய உறுதி என தெரிய வந்துள்ளது.

இதனிடையே, சட்டசபையில் மாநில தலைநகரம் குறித்த அறிவிப்பு செவ்வாய்க்கிழமை வெளியாகும் என அனைவரும் எதிர் பார்த்தனர். ஆனால் இதுகுறித்த அறிவிப்பை முதல்வர் சந்திரபாயு நாயுடு ஒத்தி வைத்தார்.

இந்நிலையில், இன்று தசமி என்பதால் காலை 12.17 மணிக்கு அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் இதுகுறித்து சட்டசபையில் விவாதம் நடைபெற உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை ஆந்திர சட்டசபையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் அமளி யில் ஈடுபட்டனர்.

அனைத்து உறுப்பினர்களிட மும் கருத்து கேட்ட பின்னர் வாக்கெடுப்பு நடத்தி, அதன் பின்னர் விவாதம் நடத்த வேண் டும் என்றும், அதன் பிறகே புதிய தலைநகர் குறித்து அறிவிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். அமளி காரணமாக அவை வியாழக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

கர்னூலில் பந்த்

இந்நிலையில், ஆந்திர மாநில புதிய தலைநகராக கர்னூலை அறிவிக்கக்கோரி மாணவர் சங்கத்தினர் புதன்கிழமை பந்த் நடத்தினர். இதற்கு வணிகர் சங்கத்தினர் உட்பட அனைத்து தரப்பினரும் ஆதரவு அளித்தனர். இதனால் கர்னூலில் பஸ், ஆட்டோக்கள் இயங்கவில்லை. கடைகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x