Published : 02 Mar 2019 09:00 AM
Last Updated : 02 Mar 2019 09:00 AM

இந்திய விமானப்படை விரட்டிச் சென்று பாக். விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட வீடியோவால் பரபரப்பு

சுட்டு வீழ்த்தப்பட்ட எப்-16 ரக போர் விமானத்திலிருந்து பாகிஸ்தான் விமானி ஒருவர் பாராசூட் மூலம் குதித்து உயிர்தப்பும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு - காஷ்மீரின் புல்வாமா வில் தீவிரவாத அமைப்பு தாக்கு தல் நடத்தியதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் இறந்தனர். இதற்கு பதிலடி தரும்விதமாக பாகிஸ்தானின் பாலகோட் பகுதிக்குச் சென்ற இந்திய விமானப் படை விமானங்கள் அங்குள்ள ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத முகாம்களை தாக்கி அழித்தன.

இதனால் ஆத்திரமடைந்த பாகிஸ்தான் ராணுவம், கடந்த 27ம் தேதி அதிகாலை இந்தியாவுக்குள் நுழைந்து எப்-16 ரக விமானம் மூலம் தாக்குதல் நடத்த முயற்சி செய்தது. இதனை உடனடியாக உணர்ந்துகொண்ட இந்திய விமா னப்படை விமானங்கள், உடனடி யாக பாகிஸ்தான் எல்லைக் குள்ளேயே சென்று அந்நாட்டு விமானங்களை விரட்டி அடித் தது. மேலும் இந்த தாக்குதலில் பாகிஸ்தானின் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாக செய்திகள் வெளியாயின. மேலும் பாகிஸ்தான் விமானம் ஒன்று இந்திய விமானப் படையால் சுட்டு வீழ்த்தப்பட்டிருப்பதாக பாதுகாப்புத்துறை செய்தி தொடர்பாளரும் அறிவித்திருந்தார். இந்நிலையில் சுட்டு வீழ்த்தப்பட்ட அந்த விமானம் எப்-16 ரக போர்விமான வகையைச் சேர்ந்தது என்று தெரியவந்துள்ளது. அந்த விமானத்தின் சில பாகங்கள் இந்திய பகுதிக்குள் சிதறி விழுந்துள்ளன. அவற்றை சேகரித்துள்ள இந்திய விமானப் படையினர், அந்த ஆதாரங்களை அமெரிக்காவிடம் வழங்கவுள்ளனர்.

அந்த விமான பாகங்கள் எப்-16 ரக போர் விமானத்தைச் சேர்ந்தது என்பதும் உறுதியாகியுள்ளது என்று விமானப்படை ஏர்வைஸ் மார்ஷரல் ஆர்ஜிகே கபூர் தெரிவித் துள்ளார். மேலும் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டபோது விமானத் திலிருந்து பாகிஸ்தான் விமானி ஒருவர் பாராசூட் மூலம் குதித்து உயிர்தப்பிய வீடியோவும் தற் போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாக்கப்பட்ட விமானத்தி லிருந்த, பைலட் தனது இருக்கையை எஜக்ட் செய்து பாராசூட் மூலம் தப்புவது தெளி வாக அந்த வீடியோவில் பதிவாகி யுள்ளது. இதன்மூலம் தாக்குதல் நடத்த வந்தது பாகிஸ்தானின் விமானம்தான் என்பது உறுதி யாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x