Published : 19 Mar 2019 11:35 AM
Last Updated : 19 Mar 2019 11:35 AM

மணமகனுக்குத் தாலி கட்டிய மணப்பெண்; கர்நாடகாவில் புதுமை

நமக்குத் தெரிந்தவரை தாலி கட்டும் பழக்கமும் உரிமையும் இதுவரை ஆண்களுக்கு மட்டுமே இருந்திருக்கிறது. ஆனால் கர்நாடகாவைச் சேர்ந்த மணப்பெண்கள், இதுவரை யாராலும் கற்பனை கூட முடியாத ஒன்றை நிகழ்த்திக் காட்டியிருக்கின்றனர்.

திருமணத்தில் ஆண்கள் மட்டுமே தாலி கட்டிய நிலையைத் தலைகீழாக மாற்றிய அவர்கள், தங்கள் மணமகனின் கழுத்தில் தாலியைக் கட்டினர். இந்தச் சம்பவம் கர்நாடகாவின் விஜய்புரா மாவட்டத்தில் உள்ள நலத்வாட் நகரத்தில் நடைபெற்றுள்ளது.

லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த மணமகன் அமித், குருபா சமுதாயத்தைச் சேர்ந்த இளம்பெண் பிரியா. ஐடி பொறியாளர்களான இருவரும் திருமண பந்தத்தில் இணைய முடிவெடுத்தனர். 12-ம் நூற்றாண்டின் லிங்காயத் சமூக அடையாளமான பசவண்ணாவின் சிலையில் முன்னால் இந்தத் திருமணம் நடந்தது. அதில் மங்கள வாத்தியங்கள் முழங்க பிரியா, அமித்தின் கழுத்தியில் தாலி கட்டினார்.

அதேபோல பிரபுராஜ் மற்றும் அங்கிதா ஆகிய இருவரும் இருவேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஆண்டாண்டுகாலமாக நடைமுறையில் இருக்கும் பழக்கத்தை இவர்களும் உடைத்திருக்கின்றனர். இந்த புதுமணத்திலும் அங்கிதா, பிரபுராஜின் கழுத்தில் தாலியை அணிவித்தார்.

இந்த இரண்டு திருமணங்களிலும் ஏராளமான உறவினர்களும் தோழர்களும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் முக்கிய லிங்காயத் தலைவர்களான குரு மஹந்தேஷ் ஸ்வாமி, விஜய் மஹந்தேஷ் மட் சித்தலிங்க சாமி, பசவராஜ் தேவரு, மஹந்த் தீர்த்த சீர், சத்தி மட்டின் பசவலிங்க சாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x