Last Updated : 27 Mar, 2019 09:03 PM

 

Published : 27 Mar 2019 09:03 PM
Last Updated : 27 Mar 2019 09:03 PM

உ.பி.யில் மீண்டும் தன் தேர்தல் பிரச்சாரப் பயணத்தை மாற்றிய பிரியங்கா

உ.பி.யில் திட்டமிட்டிருந்த தனது தேர்தல் பிரச்சாரப் பயணத்தை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா வத்ரா மீண்டும் மாற்றி உள்ளார். இதன் பின்னணியில் அவரது ரயில் பயணத்திற்கு பாதுகாப்பு படையினர் அனுமதி கிடைக்கவில்லை எனக் கருதப்படுகிறது.

 

ஏற்கனவே அமைத்த தனது திட்டப்படி பிரியங்கா நேற்று டெல்லியில் இருந்து ரயிலில் கிளம்பி பைஸாபாத் செல்வதாக இருந்தது. இதை மாற்றி அவர் இன்று விமானம் மூலம் லக்னோ அடைகிறார்.

 

அங்கிருந்து அமேதி சென்று சகோதரர் ராகுல் காந்தியின் வெற்றிக்காகப் பிரச்சாரம் செய்கிறார். அங்கு தங்கி மறுநாள் ரேபரேலியில் தாய் சோனியா காந்திக்கும் பிரச்சாரம் செய்ய உள்ளார்.

 

தனது பயணத்தின் மூன்றாவது நாளான மார்ச் 29-ல் பிரியங்கா அயோத்தி செல்கிறார். அங்கு அனுமன்கடி பகுதியில் உள்ள பிரபல அனுமன் கோயிலுக்கு மட்டும் செல்கிறார்.

 

இதற்கு முன் ஒருமுறை அயோத்தி வந்த ராகுல் செய்தது போலவே பிரியங்காவும் சர்ச்சைக்குரிய ராமர் கோயிலுக்கு செல்ல மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிறகு அங்கிருந்து பாராபங்கி வரை சுமார் 32 இடங்களின் மேடை ஏறி காங்கிரஸ் வேட்பாளர்களுக்காகப் பிரச்சாரம் செய்கிறார்.

 

பாஜக தலைவர்கள் விமர்சனம்

 

இதனிடையே, பிரியங்காவின் அயோத்தி விஜயம் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. உபியில் ஆளும் பாஜக மாநில அமைச்சரான மோஷின் ராசா பிரியங்காவை தாக்கி அறிக்கை விடுத்துள்ளார்.

 

அதில் மோஷின், ‘ராமர் இருப்பதன் மீது கேள்வி எழுப்புபவர்கள் அயோத்திக்கு சென்று என்ன செய்யப்

 

போகிறார்கள்? பாபரின் நினைவாக அங்கு அவரது மீதம் எதுவும் உள்ளதா எனும் தேடலில் செல்கிறார்.’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

இவருக்கு முன்பாக பிரியங்காவின் அயோத்தி விஜயம் மீது மத்திய அமைச்சரான ஸ்மிருதி இராணியும் விமர்சனம் செய்திருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x