Published : 13 Mar 2019 03:32 PM
Last Updated : 13 Mar 2019 03:32 PM

2019 மக்களவைத் தேர்தல்: மத்திய பாஜக தலைமை கோரிக்கைக்கு இணங்க அசாம் கணபரிஷத்துடன் கூட்டணி இறுதியானது

குடியுரிமை திருத்த மசோதா 2016  விவகாரம் தொடர்பாக முறிந்த உறவுகள் மீண்டும் மலர்ந்தது. அசோம் கணபரிஷத், பாஜக கூட்டணி அங்கு மீண்டும் மலர்ந்தது.

 

இது தொடர்பாக பாஜக தலைவர் ராம் மாதவ் கூறும்போது, “அசோம் கணபரிஷத் தலைவர்களுடன் நீண்ட விவாதத்துக்குப் பிறகு காங்கிரஸைத் தோல்வியுறச் செய்ய பாஜக-ஏஜிபி இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளது, இந்தக் கூட்டணியின் 3வது கூட்டாளி போடோலேண்ட் மக்கள் முன்னணி” என்றார்.

 

ஏஜிபி தலைவர் அடுல் போரா,  “மத்திய ஆளும் பாஜக தலைமை கேட்டுக் கொண்டதன் பேரில் நாங்கள் எங்கள் உறவுகளைப் புதுப்பித்துக் கொண்டுள்ளோம். தொகுதிப் பங்கீட்டு விவரங்கள் பிற்பாடு அறிவிக்கப்படும்” என்றார்.

 

குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தினால் அதிருப்தியில் போரா மற்றும் பிற 2 ஏஜிபி அமைச்சர்கள் சர்பானந்தா சோனோவால் அரசிலிருந்து விலகியிருந்தனர் இவர்கள் விரைவில் தங்கள் பணிகளைத் தொடரவுள்ளனர். தாங்கள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் மசோதாவை மீண்டும் கொண்டு வருவதாக பாஜக தேசியத்தலைவர் அமித் ஷா கூறியதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் கூட்டணி ஏற்பட்டுள்ளது.

 

மஹந்தாவின் எதிர்ப்பு:

 

அசோம் கணபரிஷத் கட்சியின் ஒரு பிரிவின் தலைவரும் முன்னாள் முதல்வருமான பிரபுல்ல குமார் மஹந்தா, பாஜகவுடன் மீண்டும் இணைவதை எதிர்த்துள்ளார்.  “பாஜகவுடன் இணைவது குடியுரிமை திருத்த மசோதாவுடன் கட்சியின் நிலைப்பாட்டை சமரசம் செய்வதாகும்” என்றார் மீண்டும் அமைதி சமரசமாக இவருக்கு மிசோரம் ஆளுநர் பதவி அளிக்கப்படுவதாக கூறியதாகவும் தெரிகிறது.

 

கும்மணம் ராஜசேகரன் மிசோரம் ஆளுநர் பதவியிலிருந்து கடந்த வாரம் ராஜினாமா செய்து கேரள அரசியலுக்குள் பிரவேசித்தார். ஆனால் தனக்குக் கவர்னர் பதவி குறித்து மஹந்தா கூறும் போது, “இப்போதைக்கு இது வதந்தை அளவில்தான் உள்ளது” என்றார்.

 

பாஜக-ஏஜிபி கூட்டணியை அடுத்து காங்கிரஸ் கட்சி, ‘இந்தக் கூட்டணி அசாமில் பிராதியவாதத்தின் முடிவின் ஆரம்பமாகும்” என்று கூறியுள்ளது.

 

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பிரத்யூத் போர்டோலய், “அசாம் கணபரிஷத் தன் சவப்பெட்டிக்கு கடைசி ஆணியை அடித்து விட்டது, அந்தக் கட்சியின் தலைவர்கள் அசாமுக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்பதை அறிவுறுத்தியுள்ளனர்” என்று சாடியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x