Published : 31 Mar 2019 19:22 pm

Updated : 31 Mar 2019 19:22 pm

 

Published : 31 Mar 2019 07:22 PM
Last Updated : 31 Mar 2019 07:22 PM

அமேதி தோல்விக்கு பயந்து ராகுல் கேரளாவுக்கு ஓடிவிட்டார்: அமித் ஷா கிண்டல்

அமேதி தொகுதிக்கு என்ன செய்தீர்கள் என்று மக்கள் கணக்கு கேட்பார்கள் என்பதால், அதற்கு பயந்து ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட சென்றுவிட்டார் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கிண்டல் செய்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, உ.பியின் அமேதி தொகுதி தவிர்த்து 2-வது தொகுதியாக கேரளாவின் வயநாட்டிலும் இந்த முறை மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார். ராகுல் காந்தி கேரளாவில் போட்டியிடும் முடிவு இடதுசாரி கட்சிகளுக்குள் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தின் மேற்குப்பகுதி நகரான பிஜ்னோரில் இன்று நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

அமேதி தொகுதிக்கு காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தி எம்.பியும் என்ன செய்தார்கள் என்று மக்கள் கேள்வி கேட்பார்கள் என்று பயந்து ராகுல் காந்தி, கேரளாவின் வயநாட்டில் இந்த முறை போட்டியிடுகிறார்.

கேரளாவில் ராகுல் காந்தி செல்லும் நேரத்தில் அங்கு திருப்திபடுத்தும் அரசியல் நிலவி வருகிறது. உங்களுடைய வாக்கு வங்கி அரசியலுக்காக நாட்டின் பாதுகாப்புடன் விளையாடினீர்கள். நாட்டில் எங்கு நீங்கு சென்றாலும், நீங்கள் மக்களுக்கு என்ன செய்தீர்கள் என்று கேள்வி கேட்பார்கள்

சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீவிரவாத தாக்குதல் நடந்தபோது, சுவாமி அசீமாநானந்த் மற்றும் அப்பாவிகளை சிறையில் தள்ளியது காங்கிரஸ். இந்து மதத்தின் மீது தீவிரவாதச் சாயம் பூசியது.

சம்ஜவுதா ரயில் தீவிரவாத தாக்குதலில் அப்போதைய மத்திய அமைச்சர் பி.சிதம்பரம், சுஷில் குமார் ஷிண்டே, ராகுல் காந்தி ஆகியோர், அமெரிக்க அதிகாரிகளிடம், லஷ்கர் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இல்லை, ஆனால், இங்கு இந்து தீவிரவாதம்தான் இருக்கிறது. ஆனால், விசாரணை முடிந்து, சுவாமி அசீமானானந்த் மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர்களை நீதிமன்றம் விடுவித்தது.

மதத்தோடு தீவிரவாதத்தை தொடர்பு படுத்தி பேசி காங்கிரஸ் கட்சி பெரிய பாவத்தை செய்தது. இதற்காக ராகுல் காந்தி மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும். காங்கிரஸ் கட்சியினர் தங்களின் வாக்கு வங்கிக்காக புனிதமான இந்து சமூகத்துக்கு பாவம் செய்து விட்டார்கள்.

இந்து எப்போதாவது தீவிரவாதியாக முடியுமா, எறும்புக்குக் கூட உணவு அளித்து காத்துவரும் இந்துக்கள் எவ்வாறு தீவிரவாதிகளாக மாறுவார்கள் என்ற ராகுலுக்கு தெரியாது. ராகுல் காந்தி இதுபோன்று பேசியதற்கு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்.

நான் ராகுலிடம் ஒரு கேள்வி கேட்கிறேன், ஏன் உங்கள் கொள்ளுதாத்தா ஜவஹர்லால் நேரு, டாக்டர் அம்பேத்கரை நாடாளுமன்றத்துக்கு செல்லவிடாமல் தடுத்தார். நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் படம் ஏன் வைக்கப்படவில்லை. இன்று நீங்கள் அம்பேத்கரை குறிப்பிட்டு பேசுகிறீர்கள், ஆனால் மோடி அரசு அம்பேத்கருக்கு புகழாரம் சூட்டி வருகிறது.

பமோடிதான் மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். நீங்கள் உருவாக்கிய மகாகட்பந்தன் கூட்டணியில் யார் பிரதமராக வருவார் தெரியுமா. உங்களின் கூட்டணியில் கொள்கை இல்லை, நடைமுறை இல்லை. மோடியைப் பார்த்து அச்சப்பட்டு ஒன்றாக இணைந்துள்ளார்கள்

இவ்வாறு அமித் ஷா பேசினார்.

 

தவறவிடாதீர்!    பாஜக தேர்தல் பரப்புரைஅமித் ஷாராகுல் காந்தி வயநாட்டில் ராகுல் போட்டிஅமேதி மக்கள் கேள்வி

    Sign up to receive our newsletter in your inbox every day!

    More From This Category

    More From this Author

    x